Home > அரசியல் > நீதிபதி மகள்கள் பெயரில் நில ஊழல் – வயர் செய்திக்கு தடைவிதித்த நீதிமன்றம்!

நீதிபதி மகள்கள் பெயரில் நில ஊழல் – வயர் செய்திக்கு தடைவிதித்த நீதிமன்றம்!

அடுத்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்கப் போகும் ஒரு நீதிபதியான என்.வி.ரமனாவின் மகள்கள் முன்னாள் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஒருவருடன் கூட்டுச் சேர்ந்து ஆந்திரா மாநிலத்திற்கு கட்டப்படவுள்ள தலைநகரான அமராவதி நகரில் முக்கியமான இடத்தில் நிலத்தை வாங்குவதில் ஊழல் செய்துள்ளனர்.

இந்த ஊழல் தொடர்பாக தி வயர் இணையஇதழ் வெளியிட்ட செய்திக்கு ஆந்திரா உயர்நீதிமன்றம் உடனடியாக தடைவிதித்தது. ஆனால், அதை எதிர்த்து வயர் உச்சநீதிமன்றம் சென்றது. அங்கு ஆந்திர நீதிமன்ற தடைக்கு தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 25 ஆம் தேதி மீண்டும் அந்தச் செய்தியை வயர் வெளியிட்டது.

சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் பணிபுரிந்த முன்னாள் அட்வகேட் ஜெனரலான தம்மலப்பட்டி சீனிவாஸ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அமராவதி நகரின் வரைபடத்தை பெற்றிருக்கிறார். அதை வைத்து, முக்கியமான இடங்களை கணக்கிட்டு, ஏராளமான நிலத்தை வாங்கியுள்ளார் என்று கொமட்லா ஸ்ரீனிவாச சுவாமி ரெட்டி என்ற வழக்கறிஞர் புகார் செய்தார். 2014 ஆம் ஆண்டுக்கு முன்னரே பல்வேறு பினாமி பெயர்களில் இந்த நிலத்தை சீனிவாஸ் வாங்கிப் போட்டிருக்கிறார் என்று அந்த புகாரில் கூறியிருக்கிறார்.

தம்மலப்பட்டி சீனிவாஸ் முக்கியமான அரசு உயர் அதிகாரிகள் பலருக்கு இந்த நிலத்தை வாங்கியிருக்கிறார். பினாமிகள் பெயரிலும், அதிகாரிகளின் குடும்பத்தினர் பெயரிலும் வாங்கியிருக்கிறார் என்று அந்த புகாரில் கூறியிருக்கிறார்.

இவர்களில் நீதிபதி ரமனாவின் இரண்டு மகள்களான நுதலப்பட்டி ஸ்ரீதனுஜா, நுதலப்பட்டி ஸ்ரீபுவனா ஆகியோர் பெயரிலும் நிலம் வாங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் போலிஸ் பதிவு செய்துள்ளவர்களில் 10 மற்றும் 11 ஆவது நபர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply