சின்னதும் பெரியதும் புரிஞ்சுதா?
கோவையில் கல்லடிச்சது கலவரம் பண்ணினது எல்லாம் ரொம்ம சின்ன விஜயமாம் ஊதிப் பெரிதாக்கக்கூடாதாம் வானதி அக்கா சொல்லிட்டாங்கோ…
பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை ரொம்ப ரொம்ப பொடி சமாச்சாராமாம் எதிர்கட்ட்சிகள்தாம் ஊதிப்பெரிதாக்குதாம் அறிஞர் எடப்பாடி கண்டு பிடிச்சிட்டாங்கோ….
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடும் அநியாயமாய் கொல்லப்பட்ட 13 பேரின் தாயார் அழுவதெல்லாம் சும்மா அழுகாச்சி நாடகமாம் தேர்தலில் பேசக்கூடாதாம் சங்கிகளும் அடிமைகளும் வியாக்கியானங்கோ..
சாத்தான்குள போலீஸ் வன்முறை கொல்லப்பட்டோர் வீட்டார் குலைநடுங்க கதறுவதெல்லாம் சும்மா கத்தலாம் தேர்தலில் பேசகூடாதாம் ஊடகப் புலிகள் உறுமுறாங்கோ…
பாலியல் வன்கொடுமையில் முதலிடம் வகிக்கும் உபி பற்றியோ, பாலியல் புகார்களில் சிக்கி இருப்போரில் பெரும்பகுதியினர் பாஜக என்பது பற்றியோ, சங்கிகளின் அழுகிய மூளையிலிருந்து அன்றாடம் கொட்டப்படும் பெண்விரோத மநுதர்ம சாக்கடை பற்றியோ பேசவேகூடாதாம் அதெல்லாம் வெறும் சுசூபியாயாம் நட்டநடுநிலை மூளைவீங்கிகள் சொல்றாங்கோ…
ஆனால்
ஆனால்
ஆனால்
திமுக அ.ராசா பேசிய அந்த ஒற்றை வார்த்தைதான் ரொம்பப் பெருசாம் கேடுகெட்டதாம் அயோக்கியத்தனமாம் அதைப்பற்றித்தாம் மோடி முதல் முட்டுச்சந்து அடிமை வரை பேசணுமாம் …
தேர்தல் அணையம் பாயுமாம் தண்டனை விதிக்குமாம்… அந்த ஒற்றை வார்த்தை… அந்த ஒற்றை வார்த்தை…. ம். ம்.. பேசிப்பேசி மூச்சே வாங்குது [ வேறென்ன பேசுவாங்க சங்கிகளுக்கும் அடிமைகளுக்கும் சரக்கும் காலி மூளையும் காலி]
எனக்கு ஒரேஒரு சந்தேகம் மட்டுமே
சாதிக்கொரு நீதி சொல்லும் மநுதர்மம் மட்டும்தான் இனி எங்கும் அளவுகோலோ?
ஏற்கமாட்டோம்! எதிர்த்து நிற்போம்! முறியடிப்போம்! வெல்வோம்!
சுபொஅ.