Home > அரசியல் > திமுக எனும் கலகக்குரலை அடக்க உருவாக்கப்பட்டதே அதிமுக – Amudhan Ramalingam Pushpam

திமுக எனும் கலகக்குரலை அடக்க உருவாக்கப்பட்டதே அதிமுக – Amudhan Ramalingam Pushpam

ஜெயா காலில் ஆண்கள் விழுந்து வணங்கியது ஆணாதிக்கத்திற்கு விடப்பட்ட சவாலா? அல்லது சூத்திரர்களின் மண்டியிடலா? அது பாலினப்போரா அல்லது சாதியப் போரா?

நிறையப்பேர், குறிப்பாக படித்தவர்கள் ஜெயலலிதாவை ஆண்கள் உலகில் சாதனை புரிந்த வீரப்பெண்மணி என்று சிலாகித்துப் பேசுவதைப் பார்க்கலாம். அவர் வெறும் பெண் அல்ல, ஐயங்கார் பெண் என்பதை அவர்கள் கவனிக்கத் தவறியதையும் நாம் பார்க்கலாம்.

அதிமுக எனும் கட்சியே திமுக எனும் கலகக்குரலை நீர்த்துப்போக வைக்க உருவாக்கப்பட்ட மன்னிப்புக் கடிதம் தான்.

“நாங்கள் அவ்வளவு ரோஷக்காரர்கள் இல்லை, எங்களுக்கு பார்ப்பனர் மீது எந்த விமர்சனம் இல்லை, அய்யாமாரே சாபம் போட்டு விடாதீர்! அவசரப்பட்டு அண்ணாத்துரையும் கருணாநிதியும் தப்பு பண்ணிட்டாங்க” என்று சூத்திரர்களைக் கொண்டு கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ்காரர்களும் பார்ப்பனர்களைச் சமாதானப்படுத்த உண்டாக்கிய கட்சி தான் அதிமுக.

எம்.ஜி.ஆர். போன்ற ஜனநாயகயமற்ற, சுயமோகங்கொண்ட (maglomaniac) சினிமா நடிகரைத் தலைவராக அதிமுக கொண்டிருந்ததும் தமிழர்களின் அரசியல் அறிவை, முடிவை எள்ளிநகையாடவே. இன்று வரை சினிமாக்காரர்களுக்கு மயங்குவோர் என்று நம்மை இந்தியா முழுக்க பழிப்பதற்கு எம்.ஜி.ஆர். அத்தியாயம் பயன்படுத்தப்படுகிறது. எனவே அதுவும் தற்செயலானதல்ல.

திமுக எனும் வரலாற்றுச் சவாலைத் திருத்தியெழுத, சூத்திரர்களின் கலகத்தை முடக்க, இந்திய அரசின் தரகர்களால் உருவாக்கப்பட்ட எதிர்ப்புரட்சியே அதிமுக.

அதன் தொடர்ச்சியாக ஜெயா அதிமுகவைக் கைப்பற்றிய பிறகு அதற்காகவே காத்திருந்தது போல அவரது காலில் அதிமுகவின் சூத்திர ஆண்கள் விழுந்து விழுந்து வணங்கியது திராவிட அரசியல் எனும் முயற்சிக்காக பார்ப்பன சமூகத்திடம் கூட்டு மன்னிப்புக் கோரும் குறியீட்டு நடவடிக்கை தான்.

இப்போது கூட கிராமங்களில் தலித்துகள் சாதிக்கட்டுப்பாடுகளை மீறியதாக சூத்திரர்கள் / ஆதிக்க ஜாதியினர் நினைத்தால் அதற்கு பதிலடியாகக் கொடுக்கப்படும் தண்டனைகளில் ஒன்று தலித்துகளை ஊர் மந்தையில் எல்லோர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கவைப்பது என்ற வழக்கம் இருப்பதை நாம் அறிவோம்.

கிராமங்களில் சூத்திரர்கள் தலித்துகளுக்குத் தண்டனையாகக் கொடுத்ததை (muscle memory) பார்ப்பனப் பெண் முன்பு பாவமன்னிப்பாக அதே சூத்திரர்கள் தமக்குத் தாமே கொடுத்துக் கொண்டனர் என்றும் சொல்லலாம்.

எஸ்.வி.சேகருக்கு பால்பாக்கெட் கொடுத்ததும், அவரைக் கைது செய்யாததும், எச் ராஜாவின் நீதிமன்ற அவதூறைக் கண்டும் காணாது இருந்ததும் இந்த விசுவாசத்தின் தொடர்ச்சியே.

இதன் மூலம் திராவிட இயக்கத்தால் சினம் கொண்ட பார்ப்பனர்கள் சிறிது ஆசுவாசம் அடைந்தனர். தமிழ்நாடு தாம் பயந்தது போல முற்றிலுமாக சூத்திரகளின் கைகளில் போய்விடவில்லை என்று சமாதானங் கொண்டனர். எனவே தான் பார்ப்பனியத்தில் நம்பிக்கை கொண்ட பார்ப்பனர் மற்றும் பாப்பனர் அல்லாதோர் தொடர்ந்து அதிமுகவுக்கே வாக்களித்தனர். அது 2021 சட்டமன்றத் தேர்தலிலும் குறிப்பாகக் கொங்கு பகுதியில் வெளிப்பட்டது.

இதை எந்த சுயமரியாதையுள்ள மனிதரும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. கண்டிப்பாக இதைக்கண்டு திமுக தலைவர் கலைஞர் கடும் வேதனை அடைந்திருப்பார். நம்முடன் தன்மானத்தோடு இருக்க வேண்டியவர்கள் இப்படி அசிங்கப்படுகிறார்களே என்று வருத்தப்பட்டிருப்பார்.

இதைச் சோ போன்றோரும் அறிந்திருப்பார்கள். இப்போது குருமூர்த்தி போன்றோரும் அறிந்திருப்பார்கள். எனவே தான் இன்று கூட ஜெயா இல்லாத அதிமுகவில் பார்ப்பனர்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர். எனவே தான் அவர்கள் அதிமுவை தமது இலட்சியக் கட்சியான பாஜகவின் உற்ற துணையாகப் பார்க்கின்றனர்.

You may also like
குடிமக்கள் பற்றி அரசு அறிய தனி செயலி – முதல்வர் பார்வைக்கு ஒரு யோசனை!
கிளிக்குப் பச்சை பூசுவதா? 2 – C.N.ANNADURAI
கிளிக்குப் பச்சை பூசுவதா? 1 – C.N.ANNADURAI
ஜெயக்குமாரை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!

Leave a Reply