Home > அரசியல் > பாஜக – ஆர்எஸ்எஸ்சுக்கு முறை வாசல் செய்யும் கமல்

பாஜக – ஆர்எஸ்எஸ்சுக்கு முறை வாசல் செய்யும் கமல்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது மகளை சட்ட விதிகளை மீறி மகளை சேர்த்து 200 கோடி ரூபாய் ஊழல் செய்த சூரப்பாவுக்கு கமல் ஆதரவு தெரிவித்திருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு பதிவு இது…

கமலஹாசன் அவர்களே……

நீங்கள் பேசும் ஒளிப்பதிவை பார்த்தேன்!!! ஆஹா, என்ன வீரம், என்ன வெறித்தனம் அந்த குரலில்!!!சூரப்பாவை ஆதரித்து நீங்கள் யார் என்று காட்டி விட்டீர்கள்!!! அது உங்களது உரிமை!!! ஆனால்….. கல்வி சாலைகளில், கரை வேட்டிகளுக்கு என்ன வேலை என்று கேள்வி கேட்டீர்களே…..!!!!!

இதற்குப் பிறகும் உங்களுக்கு பாடம் எடுக்கவில்லை என்றால்…… டாக்டர். நடேசனாரின் மீசை, பெரியாரின் கைத்தடி, காமராசரின் சட்டை, அண்ணாவின் குரல், கலைஞரின் பேனா எங்களை மன்னிக்காது!

கமலஹாசன் அவர்களே…பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதிவரை பஞ்சம, ஷூத்ர மக்களுக்கு, மறுக்கப்பட்ட கல்வியை கொடுத்தது… இந்த கரை வேட்டிகள் தான் என்று தெரியுமா!

குருகுலங்களாக இருந்த இடத்தில் 20,000க்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்து, சென்னை, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மதிய உணவளித்து அனைத்து சாதியினருக்கும் கல்வி கொடுத்தது… இந்த கரை வேட்டி என்பது தெரியுமா!

தாழ்த்தப்பட்ட மக்களும் படிக்கிறார்கள் என்று உங்கவா ராஜகோபால் பள்ளிகளை மூடிய பொழுது, அக்ரஹாரத்தையே கொளுத்துவேன் என்று வெகுண்டெழுந்து அந்த மக்களுக்கும் கல்வியை கொடுத்த பெரியார்… கரை வேட்டி என்பது தெரியுமா!

பல கிராமங்களில் பள்ளிகளை திறந்து மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தி, அனைத்து சாதியினருக்கும் கல்வியைகொடுத்தது… இந்த கரை வேட்டி என்பது தெரியுமா!

மாநிலத்தில் ஒரே ஒரு பல்கலைக்கழகமாக இருந்ததை பல பல்கலைக்கழகங்களாக பிரித்து, அதிக கல்லூரிகளை நிறுவி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்லூரி படிப்பு வரை கல்வியை இலவசமாக கொடுத்தது… இந்த கரைவேட்டி என்பது தெரியுமா!

இடஒதுக்கீட்டை 40லிருந்து 48% அளவிற்கு உயர்த்தி, நிறைய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை படிக்க வைத்தது… இந்த கரைவேட்டி என்பது தெரியுமா!

மதிய உணவை சத்துணவாக மாற்றி பிள்ளைகளின் பசியாற்றி, படிக்க வைத்தது… இந்த கரைவேட்டி என்பது தெரியுமா!

இடஒதுக்கீட்டை 48லிருந்து 68% அளவிற்கு உயர்த்தி, மேலும் நிறைய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை படிக்க வைத்தது… இந்த கரைவேட்டி என்பது தெரியுமா!

எட்டாம் வகுப்பு வரை படித்தால் பிறகு பத்தாம் வகுப்பு வரை படித்தால் திருமண உதவித்தொகை தருகிறோம் என்று ஊக்குவித்து, பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்தது… இந்த கரைவேட்டி என்பது தெரியுமா!

இலவச சைக்கிள், இலவச பஸ் பாஸ், பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கி பெண் பிள்ளைகளைபடிக்க வைத்தது… இந்த கரைவேட்டி என்பது தெரியுமா!

பல பாடத்திட்டங்களாக இருந்ததை ஒரே பாடத்திட்டமாக மாற்றி ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ஆரம்ப பள்ளி, மூன்று கிலோமீட்டருக்கு ஒரு நடுநிலைப்பள்ளி, ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி உருவாக்கி எல்லா பிள்ளைகளுக்கும் கல்வியை கொடுத்தது… இந்த கரை வேட்டி என்பது தெரியுமா!

மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க 15% இட ஒதுக்கீடு வழங்கி, கிராமத்துப் பிள்ளைகளை படிக்க வைத்தது… இந்த கரைவேட்டி என்பது தெரியுமா!

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தொழில் கல்வியை இலவசமாக வழங்கி அவர்களை படிக்க வைத்தது… இந்த கரை வேட்டி என்பது தெரியுமா!

படித்த பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு, பல தொழிற்சாலைகளை நிறுவியது… இந்த கரைவேட்டி என்பது தெரியுமா!

கரைவேட்டிகளிடம் தவறுகள் இருக்கலாம்! அதனை நாங்கள் சரி செய்து கொள்கிறோம்.

நீங்கள் RSS/BJP மற்றும் சூரப்பாவிற்கு முறைவாசல் செய்வதை முறையாக பாருங்கள்!

தமிழ்நாட்டில் கொக்கறிக்காதீர்கள்!

அதற்கு உங்களுக்கு உரிமை இல்லை!

இது திராவிட மண்!

You may also like
ஓம் நமோ நாராயணன் திருப்பதி நமஹ!
கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கல் இல்லை- கே.எஸ். அழகிரி
அமெரிக்கப் பணத்தில் கொழிக்கும் ஆர்.எஸ்.எஸ். – அடுக்கடுக்கான ஆதாரங்கள்!
முதல்வர் வேட்பாளர் பாஜக தலைவர் கருத்துக்கு அதிமுக பதில்

Leave a Reply