Home > அரசியல் > திருச்சி சிவாவின் மகன் மேல் வழக்குப் பதிவு

திருச்சி சிவாவின் மகன் மேல் வழக்குப் பதிவு

நட்சத்திர ஹோட்டலில் குடித்துவிட்டு

நட்சத்திர ஹோட்டலில் குடித்துவிட்டு தகராறு செய்த திமுக எம் பி திருச்சி சிவாவின் மகன் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா. இவர் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராகவும் இருந்துள்ளார். இவருக்கு சூர்யா என்றொரு மகன் உள்ளார்.

ஆனால் தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனியாக சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நண்பர் ஸ்ரீராம் என்பவருடன் பியர் குடிக்க சென்ற போது ஏற்பட்ட தகராறில் அவர் மேல் ஸ்ரீராம் புகார் அளித்தார்.

அதே போல ஸ்ரீராம் மேலும் சூர்யா புகார் அளித்தார்.

இரு புகார்களையும் பெற்றுக்கொண்ட தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து அந்த ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

You may also like
வேல் யாத்திரைக்கு போட்டியாக திமுக தேர்தல் பிரச்சாரம் – எல்.முருகன்
கனிமொழியிடம் உதயநிதி வாழ்த்துப்பெற்றார்!
ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிட வாரிசுகள் நாங்கள் – அமித்ஷாவை தெறிக்க விட்ட ஸ்டாலின்!
அம்மன் ஆலயம் கட்ட உதவும் ஒசூர் திமுக எம்எல்ஏ சத்யா!

Leave a Reply