Home > அரசியல் > தேர்தல் பிரச்சாரத்தில் பொங்கல் பரிசை அறிவித்த தமிழக முதல்வர்

தேர்தல் பிரச்சாரத்தில் பொங்கல் பரிசை அறிவித்த தமிழக முதல்வர்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் இன்று (டிசம்பர் 19) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர், பின்னர் சேலம் சுற்று வட்டார பகுதிகளில், மினி வேனில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, இருப்பாளி என்ற பகுதியில் பேசிய முதல்வர், இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில் வரும் ஆண்டு 2.06கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்ட அறிக்கையில், “பொது விநியோகத் திட்டத்தில் 5,80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன.

இவற்றைச் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற 20.12.2020 வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம்.

அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, சர்க்கரை குடும்ப அட்டைகள், தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

தீபாவளி பண்டிகை இந்துக்கள் மட்டும் கொண்டாடும் பண்டிகை என்பதால் தீபாவளிப் பரிசாக இஸ்லாமிய கிறிஸ்தவ குடும்பத்தினரின் ரேஷன் அட்டைகளுக்குப் பரிசு வழங்குவது குறித்து அரசியல் ரீதியாக விமர்சனங்கள் எழும் என அந்த ஆலோசனை அப்போது அப்படியே விடப்பட்டது.

ஆனால், பொங்கல் பண்டிகை என்பது சாதி மதங்களைக் கடந்து தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படும் சூழலில்… ஏற்கனவே தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வரும் பொங்கல் பரிசு பெட்டகத்தோடு மழை வெள்ள நிவாரண தொகையையும் கணிசமான அளவில் வழங்கலாம் என்று அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசை ரூ.2,500ஆக உயர்த்தி அறிவித்துள்ளார்.

2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து நியாய விலை கடைகளிலும், ஜனவரி 4ஆம் தேதி முதல் 2,500 ரூபாயுடன், பச்சரிசி, சர்க்கரை 1 கிலோ, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் இவற்றுடன் நல்ல துணிப்பை ஒன்றும் கொடுக்கப்படும். துண்டுக் கரும்புக்குப் பதில் முழுக்கரும்பு வழங்கப்படும் என அறிவித்தார். 

முன்னதாக, 2000 ரூபாய் தான் பொங்கல் பரிசு வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் வரை தகவல் சென்றிருக்கிறது.

இவ்வாறு 2,000தான் வழங்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், மக்கள் எதிர்பார்த்ததை விட அரசு அதிகமாகச் செய்யும் என்ற கருத்தை ஏற்படுத்துவதற்காக தற்போது முதல்வர் 2,500 ரூபாய் அறிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Leave a Reply