Home > அரசியல் > காங்கிரஸ் என்ன கிழித்தது என்று கேட்ட மோடியை கிழித்து தொங்கவிட்ட திருச்சி வேலுச்சாமி!

காங்கிரஸ் என்ன கிழித்தது என்று கேட்ட மோடியை கிழித்து தொங்கவிட்ட திருச்சி வேலுச்சாமி!

*நம்ம நரேந்திர மோடி அவர் அம்மா கருவறையில் உருவாகும் முன்னமே – பாகிஸ்தானை போரில் தோற்கடித்தது இந்தியா!

*நரேந்திர மோடி வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டிருந்த சமயத்திலேயே!-உலகிலேயே அருமையானதொரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி, நடைமுறையில் கொண்டு வந்தது இந்தியா!

*நரேந்திர மோடி தரையில் தத்தி தத்தி நடக்கும் கட்டத்திலேயே-ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முடித்திருந்தது இந்தியா!

*நரேந்திர மோடி கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்த காலத்திலேயே-மாபெரும் அணைகளான பக்ரா நங்கல் மற்றும் ரிஹான்ட் அணைகளை கட்டியிருந்தது இந்தியா! உணவுப் பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது.

*நரேந்திர மோடி அவரது மொழியில், அ ணா,ஆ வன்ணா எழுத பழகிக் கொண்டிருந்த!காலத்திலேயே- பாபா அணுசக்தி ஆய்வு மையத்தை திறந்திருந்தது இந்தியா!

*நரேந்திர மோடி, அவரது வீட்டில் சிமினி விளக்கு ஏற்றப் பழகிக் கொண்டிருந்த காலத்திலேயே- தாராபூர் அணு உலையிலிருந்து மின் உற்பத்தியை துவக்கியது இந்தியா! இந்திரா காலத்திலேயே பொக்ரானில் முதல் அணு வெடிப்பு சோதனையை இந்தியா செய்தது.

*நரேந்திர மோடி தனது சட்டைப் பொத்தான்களை சரிவர மாட்டத் தெரியாத காலத்திலேயே- டஜன் கணக்கிலான IIT, IIM மற்றும் நூற்றுக்கணக்கான பல்கலைக் கழகங்களில் இருந்து, படித்து முடித்த ஆயிரக்கணக்கான பட்டதாரி வல்லுநர்கள், வெளிவரத் துவங்கி விட்டனர், இந்தியாவில்!

*நரேந்திர மோடி , ஒழுகும் தனது மூக்கை சரியாகத் துடைக்கக் கூட பழகாத காலத்திலேயே- எண்ணற்ற மிகப்பெரிய தொழிற்சாலைகள் மூலம் , உற்பத்தியை துவக்கியிருந்தது இந்தியா!

*நரேந்திர மோடி, பெற்ற தாயையும், கட்டிய மனைவியையும் நிராதாரவாக விட்டு, இமயமலைக்கு ஓடிப் போனதாக (??) சொல்லித் திரியும் காலத்திலேயே- லாகூர் வரை ஊடுறுவி, எதிரிகளை துவம்சம் செய்தது இந்தியா! பாகிஸ்தானை இரண்டாகப் பிளந்து பங்களாதேஷ் என்ற ஒரு தனி நாட்டை உருவாக்கி காட்டியது இந்தியா.

*நரேந்திர மோடி , பள்ளியில் அமர்ந்து பலகையை பார்த்துக் கொண்டிருந்த காலத்திலேயே வல்லபாய் படேலால் முடியாத போர்ச்சுக்கீசியரிடம் இருந்து கோவாவை பெற்றது இந்தியா!

*நரேந்திர மோடி, முளைத்த பற்களை தொட்டுத்தடவி எண்ணிக்கொண்டிருந்த வேளையிலேயே- ஆர்யபட்டா பாஸ்கரா ரோகிணி எஸ்எல்வி பிஎஸ்எல்வி என விண்வெளி முஸ்தீபுகளை, இஸ்ரோ துவக்கியிருந்தது இந்தியாவில்! அக்கினி என்ற ஏவுகணையும் தயாரித்திருந்தது.

*மேலும், 1947 இல் சுதந்திரம் வாங்கும் போது, இந்தியர்களின் சராசரி வயது 32, மோடி ஆட்சிக்கு வரும்போது அது 67 சதமாக அதிகரித்துள்ளது.

*1947 இல் சுதந்திரம் வாங்கி இந்தியா என்ற நாடு உருவாகியபோது, இந்தியாவில் படிப்பறிவு உடையவர்கள் 16%, 2014 இல் மோடி ஆட்சிக்கு வரும்முன் அது 74% சதமாக உயர்ந்துள்ளது.

*1947 இல் சுதந்திரம் வாங்கும் போது, இந்தியாவில் வறுமைகோட்டுக்கு கீழிருந்தவர்கள் 70%, மோடி ஆட்சிக்கு வரும்முன் அது 21% சதமாக குறைந்திருக்கிறது.

*1947 இல் சுதந்திரம் வாங்கும் போது 2.7 லட்சம் கோடி ரூபாயாக இருந்த GDP, மோடி ஆட்சிக்கு வரும்முன் 57 லட்சம் கோடி ரூபாயாக பெருகியிருந்தது.

*1947 இல் சுதந்திரம் வாங்கும் போது 250 ரூபாயாக இருந்த சராசரி ஆண்டு தனி நபர் வருமானம், மோடி ஆட்சிக்கு வரும்முன் 88,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

*1947 இல் சுதந்திரம் வாங்கும் போது 1362 MW என்ற அளவில் இருந்த மின் உற்பத்தி, மோடி ஆட்சிக்கு வரும்முன் 267 GW என்று பல மடங்கு உயர்ந்திருந்தது.. தனி நபர் மின் நுகர்வு, 1947 இல் வெறும் 16.3 kWh தான், 2014 இல் 1010 KWh என அதிகரிப்பு.

*1947 இல் சுதந்திரம் வாங்கும் போது இந்தியாவில் வேறும் 1500 கிராமங்களில் தான் மின்சார வசதி இருந்தது, மோடி ஆட்சிக்கு வரும்முன் 6,22,867 கிராமங்களுக்கு மின்வசதி கொடுக்கப்பட்டுவிட்டது. 1947 இல் ஒற்றை இலக்க சதவீத மக்களுக்கு மட்டும் கிடைத்த மின் வசதி, மோடி ஆட்சிக்கு வரும்முன் 80% மக்களுக்கு கிடைத்துள்ளது.

*1947 இல் சுதந்திரம் வாங்கும் போது 4 லட்சம் கிலோமீட்டர் சாலைகள் இருந்தன, மோடி ஆட்சிக்கு வரும்முன் 56 லட்சம் கிலோமீட்டர் சாலைகள் அமைக்கபட்டுவிட்டன.

*இதெல்லாம் வளர்ச்சி இல்லையா? முன்னேற்றம் கிடையாதா? ஒருவேளை, அம்பானி அதானியின் சொத்து மதிப்பு பூதாகரமாக உயர்வது மட்டும்தான் வளர்ச்சி என்று மோடி ஆதரவு பிஜேபி ஆட்கள் நம்புகிறார்களோ?*
*என்னமோ நரேந்திர மோடி வந்து தான் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு போவதாக, கனவு கண்டு கொண்டு, வாயாலேயே வடை சுட்டுக் கொண்டுத் திரிகிறது ஒரு கூட்டம்.

Leave a Reply