Home > அரசியல் > பிரியங்கா காந்திகட்சி தலைமை பற்றி கூறியது பற்றி காங்கிரஸ் விளக்கம்

பிரியங்கா காந்திகட்சி தலைமை பற்றி கூறியது பற்றி காங்கிரஸ் விளக்கம்

நேரு குடும்பத்தை சாராதவர் காங்கிரஸ் தலைவராக வரவேண்டும்’ என பிரியங்கா காந்தி அளித்த பேட்டி ஓராண்டுக்கு முந்தையது’ என காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. ‘நாளைய இந்தியா அடுத்த தலைமுறை அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடல்’ என்ற புத்தகம் தற்போது வெளியாகி உள்ளது.

அதில் காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா அளித்த பேட்டி ஒன்று இடம் பெற்றுள்ளது. அதில், ‘நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சி தலைவராக வரவேண்டும் என்ற ராகுலின் கருத்தை ஆதரிக்கிறேன். காங்கிரஸ் தனது தனித்துவமான பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்க வேண்டும்,’ என பிரியங்கா கூறி உள்ளார்.

தற்போது, காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா இருந்து வரும் நிலையில், ராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டுமென மூத்த தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த நிலையில், பிரியங்காவின் பேட்டி குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது குறித்து காங்கிரசின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று தனது டிவிட்டரில் அளித்துள்ள விளக்கத்தில், ‘பிரியங்கா அளித்த பேட்டி ஓராண்டுக்கு முந்தையது.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்று ராகுல் தனது பதவியை ராஜினாமா செய்த சூழலில், பிரியங்கா அவ்வாறு கூறியுள்ளார். ஆனால், தற்போது ராகுல் தான் தலைவராக வேண்டுமென கட்சி தொண்டர்கள் விரும்புகின்றனர்.

பாஜ.வின் தூண்டுதலால் பிரியங்காவின் பேட்டி தற்போது கொடுத்த மாதிரி திரித்து பரப்பப்படுகிறது. இன்றைய அரசியலில் மோடி-ஷா இருவரின் போக்கை எதிர்த்து பயமின்றி எதிர்த்து போராடுவது தான் எங்கள் குறிக்கோள்,’ என கூறியுள்ளார்.

You may also like
கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கல் இல்லை- கே.எஸ். அழகிரி
ஞானதேசிகன் உடல் இன்று தகனம்!
மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மேற்கு வங்காளம் தலைவணங்காது- மம்த பானர்ஜி
அகமது பட்டேல் (71) கொரோனா பாதிப்பால் காலமானார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் காலமானார்

Leave a Reply