Home > அரசியல் > நீட் விவகாரத்தில் சூர்யாவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆதரவு

நீட் விவகாரத்தில் சூர்யாவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆதரவு

நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். நீட் தற்கொலை விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அவை சமூக வலைதங்களில் மிக வேகமாக பரவி, பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. மேலும் அந்த அறிக்கையில், நீதிமன்றத்தை குறிக்கும் ஒரு செய்தியையும் நடிகர் சூர்யா பதிவிட்டிருந்தார்.

‘கொரோனா தொற்று காரணமாக உயிருக்கு பயந்து, நீதிமன்றமே வழக்குகளை வீடியோ கான்ஃபிரசின் மூலம் நடத்தி வரும் நிலையில், மாணவர்கள் தேர்வெழுத உத்தரவை பிறப்பித்துள்ளது நீதிமன்றம்’ என நீதிமன்றம் தொடர்பான ஒரு கருத்தை தனது அறிக்கையில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், நடிகர் சூர்யா மீது ‘நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை’ எடுக்கவேண்டுமென்று தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதன் அடிப்படையில், இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தான், ஓய்வு பெற்ற நீதிபதிகளும் சூர்யாவின் கருத்து தொடர்பாக பல்வேறு செய்திகளை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், சூர்யா கூறிய கருத்தில் நியாயமான சமூக கோபமே உள்ளது என பொதுமக்களும், சூர்யா ரசிகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் டிவிட்டரில் #TNStandwithsurya மற்றும் #நீட்என்ற_மனுநீதிதேர்வு ஹேஷ்டேக்கில் தங்கள் ஆதரவை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதியரசர்கள் வலிந்து அழைத்தும் கொரோனாவுக்கு பயந்து நீதிமன்றங்களுக்கு வர மறுத்துவிட்டனர்.

அவர்களை நீதிமன்றத்திற்கு பயமின்றி வாருங்கள் என்று நீதியரசர் சுப்பிரமணியன் உத்தரவிட முடியுமா? பாவம் மாணவர்கள்! சூரியா சொன்னதில் நீதிமன்ற அவமதிப்பு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

You may also like
இந்தியாவில் குடும்ப பரம்பரை ஜனநாயக ஆட்சிமுறைதான் தொடருமா? –
நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழகத்தில நீட்தேர்வை ரத்து செய்வது எப்படி – மு.க.ஸ்டாலின் விளக்கம்
சூரரைப்போற்று படத்துக்கு தடை

Leave a Reply