Home > அரசியல் > இஸ்லாமியர்களை தொடரும் இன்னல்கள்!

இஸ்லாமியர்களை தொடரும் இன்னல்கள்!

கொரோனா தொற்று நோயும் அதையொட்டிய நீண்ட ஊரடங்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட அனைத்து இந்தியர்களுக்கும் அச்சம் மிகுந்த காலமாகிவிட்டது. மருந்தே இல்லாத மரணத்தை உறுதிசெய்யும் கிருமியை எதிர்த்து நாடு போராடுகிறது. ஆனால், நீங்கள் ஒரு இந்திய முஸ்லிமாக இருந்தால், உங்களுக்கு இது விரக்தி மிகுந்த படுமோசமான காலம் இது. நாடு விடுதலைப் பெற்றதற்கு பிறகான காலத்தில் பல கஷ்டங்களை இந்திய முஸ்லிம்கள் கடந்து வந்திருக்கிறார்கள். இந்தியா பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவர்களுக்கு எதிரான ரத்தக்களறிமிகுந்த போராட்டங்களில் அவர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கானவர்கள் பாகிஸ்தானுக்கு போகும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். மதவெறி வன்முறையில் அவர்களுடைய இழப்புகள் இப்போது பிளாஷ்பேக்காக ஓடத் தொடங்கியிருக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் பசு பாதுகாப்பு என்ற பெயரிலும் லவ் ஜிகாத் என்ற பெயரிலும் நூற்றுக்கணக்கானவர்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பலர் கொல்லப்பட்டனர். ஒரு மசூதி இருந்த இடத்தை நாசம் செய்துவிட்டு, ராமருக்கு கோயில் கட்டுவதற்கான இயக்கத்தில், ஒரு கொடூரமான கும்பலால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக வந்த ஆண்டுகளில் முஸ்லிம் ஆண்கள் சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்படுவது வாடிக்கையானது. நிரபராதிகள் என்று முடிவு செய்வதற்குள் அவர்கள் பல பத்தாண்டுகளை சிறைகளில் கழிக்க வேண்டியதாயிற்று. 2014ல் நரேந்திரமோடிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியதிலிருந்த, மீண்டும் அவர்களுடைய காலம் மிகக் கடினமாகியிருக்கிறது. மிக உயர்பதவியில் இருப்பவர்கள்கூட முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்கும் பேச்சுகளை பேசுவது தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. ஹிந்தி, மற்றும்பல இந்திய மொழி ஊடகங்கள் இந்த வெறுப்பை பரப்புவதில் பங்காற்றும் முக்கிய பங்காளிகள் ஆகிவிட்டன. 2019ல் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்ததும், இஸ்லாமியர்களுக்கு எதிரான, அவர்களைக் குறிவைத்து, அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான தாக்குதல்கள் நடைபெற்றனர். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து பறிக்கப்பட்டு அங்கு கடந்த எட்டு மாதங்களாக ஊரடங்கை அமல்படுத்தியது, முத்தலாக் தடை, ராமர்கோயில் கட்டுவதற்கு சாதகமான தீர்ப்பு ஆகியவை குறிப்பானவை. குடியுரிமைச் சட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்களை எதிர்த்து நாடுதழுவிய மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து முஸ்லிம்களின் இதயத்தில் ஒரு நம்பிக்கை உருவானது. ஏனெனில் அவர்களுக்கு ஆதரவாக அனைத்து பிரிவு மக்களும் மாணவர்களும் பாரபட்சம் இல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போதோ, கொரோனா வைரஸை வைத்து, இஸ்லாமியர்களையே ஒரு வைரஸாக சித்தரித்து பரப்பும் போக்கு அதிகரித்துள்ளது. எல்லா காலத்தையும் போல இஸ்லாமியர்கள் இதையும் கடந்து வருவார்கள். டெல்லியில் அரசு சார்பில் மக்களுக்கு உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து கூடிய இஸ்லாமியர்களை போலீஸார் அடித்து விரட்டிய கொடுமைகள் நடந்துள்ளனர். அதேசமயம், பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் தங்கள் சொந்த செலவில் ஏழைகளுக்கு உணவளிப்பதை தடைசெய்யவும் அரசுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.

You may also like
வழக்கறிஞர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க அவசியமில்லை
இந்தியாவின் சாபக்கேடு அதன் நீதிமன்றங்கள்!
ஆக்சிஜனில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பிரிவினை அரசியல்!
இரண்டு தவணை தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்? மருத்துவரின் விளக்கம்!

Leave a Reply