Home > அரசியல் > திமுகவில் புதிய “காக்காய் புடிக்கி” பழக்கம்!

திமுகவில் புதிய “காக்காய் புடிக்கி” பழக்கம்!

அதிமுகவில்தான் விருப்பமனு தாக்கல் செய்கிறவர்கள் ஜெயலலிதா பெயருக்கு ஒன்றும் தனது பெயருக்கு ஒன்றுமாக பணம் கட்டுவார்கள். அந்த பொம்பள என்னா செய்யும்னா அது இஷ்டத்துக்கு யாராச்சும் ஒருத்தனுக்கு சீட் கொடுக்கும்.

திமுகவில் இதுவரை இரட்டைத் தொகுதிகளுக்கு பணம் கட்டுவதோ, தலைவர்கள் பெயருக்கும் தனக்குமாக மனு தாக்கல் செய்வதோ கேள்விப்பட்டதில்லை.

ஆனால், பலகட்சி பலராமன் ஒருத்தர் இருக்கிறார். டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. இப்படி ஒரு புதுப்பழக்கத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். குறுகிய காலத்தில் பல கட்சிகளுக்கு தாவியவர் இவர். திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

டாக்டராக இருந்தாலும், தனது புகழ்பாடவே லோக்கல் சேனல் நடத்தி, தன்னை ஒரு தர்மபிரபுவாக காட்டிக் கொண்டவர். தொகுதிக்கு என்ன செய்திருக்கிறாரோ இல்லையோ, அவருக்கு உதவி செய்தார், இவருக்கு உதவி செய்தார்னு தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில் ரொம்ப அக்கறை காட்டினார்.

இதிலும் சில மோசடிகள் இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். பில் தொகையில் சில ஆயிரங்களை குறைத்துக் கொண்டு, சம்பந்தப்பட்டவருக்கு இலவசமாக உதவி செய்ததைப் போல விளம்பரம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் தன்னால் ஜெயிக்க முடியும் என்று நம்பினால், மதுரை வடக்கு தொகுதிக்கும் சேர்த்து இரட்டை தொகுதிக்கு ஏன் விருப்ப மனு தாக்கல் செய்கிறார். அதாவது திருப்பரங்குன்றம் தொகுதிக்கு ராஜன் செல்லப்பா போட்டியிடப்போவதாக ஒரு தகவல் வெளியானதால்தான் டாக்டர் சரவணன் மதுரை வடக்கு தொகுதிக்கும் மனுச் செய்திருக்கிறார் என்று பரவலாக பேச்சு அடிபடுகிறது.

இரட்டைத் தொகுதிக்கு மனுச் செய்வது இருக்கட்டும். அது என்ன தளபதிக்கும் உதயநிதிக்கும் மனுச்செய்வது? அவர்கள் விரும்பினால் அவர்கள்தானே மனுச்செய்ய வேண்டும். இதுதானே திமுகவில் பழக்கம்.

சரவணன் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த பழக்கம் காக்கா புடிக்கிகளை உருவாக்கவே செய்யும். இந்த பழக்கத்தை திமுகதலைவர் உடனே கண்டித்திருக்க வேண்டும். ஏனோ அவர் இதை தவறாக கருதாமல் விட்டுவிட்டார்.

எப்படி இருந்தாலும் இது தவறான பழக்கம்.

மிக முக்கியமான விஷயம், மதுரை வடக்குத்தொகுதியில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அவர்களுக்கு எதிராக சரவணன் வேலை செய்வார் என்றும் கட்சிக்காரர்கள் கூறுகிறார்கள். அந்தத் தொகுதியில் போட்டியிட பொன் முத்துராமலிங்கமும் விருப்ப மனு அளித்துள்ளார் என்பதை கவனிக்க வேண்டும். அவர் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யப்போகிறார் என்பது சரவணனுக்கு தெரியும். இருந்தாலும் விருப்பமனு தாக்கல் செய்திருப்பது கட்சிக்காரர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

You may also like
நல்லா கெளப்புறாய்ங்கடா பீதிய! – ஒரு சாமியாரின் புது சரடு!
உதயநிதி ஸ்டாலின் ஊர் சுற்ற வேண்டும்!
சீமான் அயோக்கியர் என்று சொல்ல பல காரணங்கள் உள்ளன..!
தம்பிகளின் தல வரலாறு . பாகம் 2.

Leave a Reply