Home > அரசியல் > கவிஞர் கனிமொழிக்கு நன்றி கூறிய தம்பதி!

கவிஞர் கனிமொழிக்கு நன்றி கூறிய தம்பதி!

நெய்வேலியை சேர்ந்த குணவதியும் அவரது கணவர் மணிவேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்து, துபாயிலிருந்து  சொந்த ஊருக்கும் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது  குணவதி  8 மாத  கர்ப்பிணியாக  இருந்ததால்  மருத்துவ  செலவு  மற்றும் அன்றாட தேவைகளுக்கு கூட மிகவும் சிரமப்பட்டார்கள்.

அதைத்தொடர்ந்து,அவர்கள் குவைத் திமுக மூலம் கவிஞர் கனிமொழியின் உதவியை  நாடினார்கள்.  அதையடுத்து,  கனிமொழி கருணாநிதி,  எம்.பி.,  எடுத்த  உடனடி  நடவடிக்கையால்  ஜூன் 22-ம் தேதி பத்திரமாக சொந்த ஊர் திரும்பினார்கள்.

அவர்களுக்கு தற்போது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாங்கள் பத்திரமாக சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுத்த
கனிமொழிகருணாநிதி, எம்.பியை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க  நன்றி கூறினார்கள்..

அப்போது அக்குழந்தையை தாயுள்ளத்தோடு  கொஞ்சிய  கனிமொழி கருணாநிதி,  எம்.பி.,  உங்களுக்கு  எந்தவித  கவலையும்  வேண்டாம்,  உங்களுக்கு  உதவ  நாங்கள்  இருக்கிறோம்  என  ஆறுதல் கூறினார்

You may also like
“இதுதான், கோழைகளுக்குத் தெரிந்த ஒரே ஆயுதம்” – கனிமொழி கண்டனம்..
ஆளுனர் மாளிகையை முற்றுகையிட முயற்சி; எம்.பி கனிமொழி மீது வழக்குப்பதிவு
புதிர் போட்டியில் புறக்கணிக்கப்படும் தமிழ்! கனிமொழி கடும் கண்டனம்
திராவிடத்தை எதிர்ப்பவர்கள் யார்?

Leave a Reply