Home > அரசியல் > கொரியா – தமிழக பழங்காலத் தொடர்புகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கில் தொல் திருமாவளவன் பங்கேற்பு

கொரியா – தமிழக பழங்காலத் தொடர்புகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கில் தொல் திருமாவளவன் பங்கேற்பு

பண்டைய தமிழகம் மற்றும் கொரியா இடையிலான தொடர்புகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கத்தை கொரியா தமிழ்சங்கமும் தென்புலத்தார் அமைப்பும் இணைந்து நடத்தின. கொரியா தமிழ்சங்கத்தின் தலைவர் முனைவர் ராமசுந்தரம் வரவேற்றார். கொரியா தமிழ்ச்சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து முனைவர் பாஸ்கரன் புருஷோத்தமன் விளக்கினார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து முனைவர் ஆரோக்கியராஜ் பேசினார். பங்கேற்ற சிறப்பு விருந்தினர் ஒரிசா பாலுவை அறிமுகப்படுத்தி த.யசோதாவும், பேராசிரியர் முனைவர் நா.கண்ணனை அறிமுகப்படுத்தி கிறிஸ்டி காத்தரினும், கருத்தரங்கில் பங்கேற்ற இந்திய நடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவனை அறிமுகப்படுத்தி முனைவர் ஆரோக்கியராஜும் பேசினார்கள். கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அப்துல்கலாமின் ஆலோசகர் வெ.பொன்ராஜ் கருத்தரங்கத்தை வாழ்த்திப் பேசினார். கருத்தரங்கில் தமிழ் கொரியா கடல்வணிகம் குறித்து ஒரிசா பாலுவும், தமிழ்-கொரியா மொழியியல் ஒற்றுமை குறித்து பேராசிரியர் முனைவர் நா.கண்ணன் ஆகியோர் பேசினார்கள். இறுதியாக சிறப்பு விருந்தினர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., சிறப்புரையாற்றினார். இந்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் வலியுறுத்த வேண்டிய கோரிக்கைகள் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பொறியாளர் சகாய டர்சியூஸ் மற்றும் ராமசுந்தரம் ஆகியோர் முன்மொழிந்தும் வழிமொழிந்தும் பேசினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக முனைவர் செ.அரவிந்தராஜா நன்றி கூறினார். கருத்தரங்கில் வளரும் இசைக்கலைஞர் சர்வேஷ் பாரதிராஜா தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசியகீதமும் இசைத்தார். மெட்ரோ நாட்டியாலயா மாணவி எஸ்.பி.சுபா காவ்யா நடனமாடினார். கருத்தரங்கை, இணைச்செயலாளர் முனைவர் ஆரோக்கியராஜ், தலைவர் முனைவர் ராமசுந்தரம், தொழிநுட்பத்துறையின் பொறியாளர் சகாய டர்சியூஸ், இணைச்செயலாளர் முனைவர் மோ.பத்மநாபன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் லோ.ஆனந்தகுமார், துணைத்தலைவர் முனைவர் கிறிஸ்டி காத்தரின், செயலாளர் முனைவர் ராமன் குருசாமி, அறிவுரைக்குழு முனைவர் இரா.அச்சுதன், முனைவர் பாஸ்கரன் புருசோத்தமன், முனைவர் அந்தோணி ஆனந்த், முனைவர் செ.அரவிந்தராஜா, பொறியாளர் ப.பிரதீப்குமார், பொறியாளர் ஆனந்த முத்துச்சாமி, இரா.யசோதா ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.
You may also like
வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் குறித்து ஆன்லைன் கருத்தரங்கம்!
தமிழ்-கொரிய மொழி ஒற்றுமை- கொரியா தமிழ் ராணி செம்பவளம் எங்கிருந்து போனார்?
சாதி – மதத் தூய்மைவாதம் என்ற பெயரால் வெறுப்பை விதைக்கக்கூடாது! கொரியா தமிழ் சங்க கருத்தரங்கில் தொல்.திருமாவளவன் பேச்சு
மனிதகுலத்தை சிதைக்கும் பாரம்பரிய தனித்துவப் போக்கு

Leave a Reply