Home > அரசியல் > பொன்முடி கேட்கும் பதவி பாகப்பிரிவினை

பொன்முடி கேட்கும் பதவி பாகப்பிரிவினை

செப்டம்பர் 9ஆம் தேதி திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடக்க இருக்கும் நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.

இதுபோலவே தற்போது திமுகவின் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் பொன்முடி மாவட்ட அரசியலிலிருந்து உயர்த்தப்பட்டு கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வந்தது.

அதேநேரம் பொன்முடி தனக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுவதை விரும்பவில்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

நேருவும் பொன்முடியும் 1989ஆம் ஆண்டில் கலைஞர் அமைச்சரவையில் அமைச்சரானவர்கள். அப்போது கூட அமைச்சரவைப் பட்டியல் படி பார்த்தால் நேருவை விட பொன்முடியை உயர்த்தியே வைத்திருந்தார் கலைஞர்.

இந்த நிலையில் தனக்கு இணையாகவே வளர்ந்து வந்த நேரு தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக இருக்கும் நிலையில்… தான் எப்படி மூன்றில் ஒன்றான துணைப் பொதுச் செயலாளராக இருக்கமுடியும் என்று பொன்முடி கேட்கிறார்.

எனவே தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் என்ற பதவியை இரண்டாக்கி அதில் ஒன்றை நேருவுக்கும் ஒன்றைத் தனக்கும் கொடுக்க வேண்டும் என்பது தான் பொன்முடியின் கோரிக்கை என்கிறார்கள் பொன்முடியின் ஆதரவாளர்கள்.

இது மட்டுமல்ல… தனது விழுப்புரம் மத்திய மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ஒரு மாவட்டத்திற்கு வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவரையும் இன்னொரு மாவட்டத்துக்குத் தனது மகன் கௌதம சிகாமணியையும் மாவட்டப் பொறுப்பாளராக ஆக்க வேண்டும் என்பதும் பொன்முடியின் கோரிக்கையாக இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து இரு மாவட்டப் பொறுப்பாளர்கள் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் தன் மகனுக்கும் ஒரு மாவட்டப் பொறுப்பாளர் வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறார் பொன்முடி.

அப்போதுதான் தான் மாநில அளவு பதவிக்குச் சென்றாலும் விழுப்புரத்தை விட்டு தனது பிடி நழுவாமல் இருக்கும் என்பதும் அவரது கணக்கு.

இதற்காக உதயநிதி மூலம் கௌதம சிகாமணி முயற்சி செய்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

ஸ்டாலின் சென்னை மேற்கு போல ஒரு முடிவெடுப்பாரா என்பது விரைவில் தெரியும்” என்கின்றனர் விழுப்புரம் மாவட்ட உடன்பிறப்புகள்.

You may also like
நீட் தேர்வு குறித்து ஸ்டாலின் அறிக்கை
தாயார் தவுசாயம்மாள் மறைவு : முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்
“வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் தேவை” – மு.க ஸ்டாலின்
அண்ணா பல்கலைக்கழக
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம்..

Leave a Reply