Home > அரசியல் > தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வராத 11 மாவட்ட செயலாளர்கள்

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வராத 11 மாவட்ட செயலாளர்கள்

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 13ஆம் தேதி சென்னை கோயம்பேட்டில் இருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 67பேரில் 56 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

மீதி 11 மாவட்டச் செயலாளர்கள் வராதது பற்றி கூட்டத்திலேயே காரணத்தைக் கூறியுள்ளார் துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி.

மாலை நடைபெறும் விழாவுக்கான ஏற்பாடுகளை மூன்று மாவட்டச் செயலாளர்கள் கவனித்து வருகிறார்கள். ஒரு மாவட்ட செயலாளர் விஜய் பிரபாகரனுடன் இருக்கிறார்.

மற்ற ஏழுபேர் உடல் நிலை சரியில்லை என்றும், சொந்த காரணத்தால் வரமுடியவில்லை என்றும் கூறியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த் 15 நிமிடங்கள் மட்டுமே இருந்துவிட்டு பேசமுடியாமல் வீட்டுக்கு சென்றபோது அனைத்து நிர்வாகிகளும் கண் கலங்கிவிட்டனர்.

பிரேமலதா பேசும்போது, “கட்சியைப் பலப்படுத்துங்கள். தேர்தல் நெருங்கிவிட்டது.

நீங்கள் தயாராகுங்கள். உங்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். கேப்டன் நல்ல வழியில் கொண்டு போவார் என்றார். 11.00 மணிக்கு துவங்கிய கூட்டம் பிற்பகல் 2.10 மணிக்கு முடிந்தது

Leave a Reply