Home > அரசியல் > பாஜகவுக்கு பயந்து திமுகவையே பாஜகவாக மாற்றத் துடிக்கும் திமுக நிர்வாகிகள்! – bjp vs dmk

பாஜகவுக்கு பயந்து திமுகவையே பாஜகவாக மாற்றத் துடிக்கும் திமுக நிர்வாகிகள்! – bjp vs dmk

கடலுக்கடியில் இருக்கும் சுண்ணாம்புப் பாறையை ராமர் கட்டிய பாலம் என்று கூறி, தென் தமிழகத்தை வளம்கொழிக்கச் செய்யும் சேதுசமுத்திர திட்டத்தை முடக்கியவர்கள் பாஜக சங்கிகள்.

அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு “ராமர் எந்த கல்லூரியில் படித்து இன்ஜினியர் ஆனார்?” என்று இடக்காக பதிலளித்தவர் தலைவர் கலைஞர்.

ஆனால், இப்போது பாஜகவினர் முருகனைக் கைப்பற்றி திமுகவை தோற்கடித்துவிடுவார்கள் என்று பயந்து, இவர்களே முருகனின் அருளோடு உதயநிதியின் பிரச்சார பயணத்தை வரவேற்று போஸ்டர் அடிக்கும் அளவுக்கு போய்விட்டார்கள்.

முருகன் அருள் இருந்தால் ஏன் உதயநிதியை போகிற இடமெல்லாம் கைதுசெய்து பிரச்சாரத்தை நடத்தவிடாமல் செய்கிறார்கள்? அப்படி முருகன் அருள் இருந்தால், போலீஸும் அரசும் உதயநிதிக்கு சாதகமாக அல்லவா இருக்க வேண்டும்?

இப்படியெல்லாம் பாஜகவின் போக்கிற்கு திமுக போனால் அந்த கட்சியின் பிரச்சாரத்துக்கு பயப்படுவதாகத்தானே அர்த்தம்? திமுகவின் தனித்தன்மை போய்விடாதா என்று கேட்டால், திமுகவில் உள்ள எச்சை ராஜாக்கள் சிலர் நம்மையே ஆண்டி திமுக என்று சொல்லும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

அப்படி சொல்வதோடு நிறுத்துகிறார்களா? திடல்காரன், தி.க.காரன் என்றும் பட்டம் சூட்டுகிறார்கள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மகத்தான முழக்கத்திற்கு அர்த்தம் தெரியாத சிலர், அண்ணா கடவுள் நம்பிக்கையை மறுக்கவில்லை என்று வியாக்கியானம் செய்கிறார்கள்.

திமுகவில் இறைநம்பிக்கை உள்ளவர்களுக்கு இடமுண்டு. அதேசமயம், திமுக நிர்வாகிகளாக இருப்பவர்கள் பகுத்தறிவு, சுயமரியாதை உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதையும், அப்படித்தான் இருந்தார்கள் என்பதையும் நேற்றைக்கு கட்சியில் சேர்ந்து, இன்றைக்கு போஸ்ட்டிங் வாங்கிய புத்திசாலிகளுக்கு புரிய வைப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிறது.

அட போங்கப்பா நீங்களும் உங்கள் வியாக்கியானங்களும் என்று வெறுத்துப் போய்விடுகிறது.

You may also like
புதிய சட்டமன்றக் கட்டடத்தில் இருந்து மருத்துவமனையை மாற்றியே தீரவேண்டும்! – LR JAGADHEESAN
தலைமைச் செயலாளர் இறையன்புவின் தலைமைப் பண்பு – கிள்ளை ரவீந்திரன்!
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!
தமிழக அரசுக்கு ஒத்துழைக்க வேல்முருகன் எம்.எல்.ஏ., வேண்டுகோள்!

Leave a Reply