Home > அரசியல் > சித்தர் கட்டுப்பாட்டில் திமுக பொதுசெயலாளர்

சித்தர் கட்டுப்பாட்டில் திமுக பொதுசெயலாளர்

திமுக பொதுச் செயலாளரான துரைமுருகனுக்கு திமுகவில் இருந்தும் கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தும்வாழ்த்துகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் துரைமுருகன் பொதுச் செயலாளர் ஆனதும் தேடிச் சென்று, வாழ்த்தும் ஆசியும் பெற்றது ஒரு சித்தரிடம்.

வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே குளிப்பதால் பார்ப்பதற்கு வடநாட்டு அகோரி போலவே இருக்கும் அந்த சித்தரைத் தேடி தன் மகன் கதிர் ஆனந்தோடு செப்டம்பர் 17 இரவு சென்றிருக்கிறார் துரைமுருகன்.

‘அய்யா… நீங்க சொன்னதைப் போலவே என் பையனும் டெல்லிக்கு ஜெயிச்சு போயிட்டான். நானும் பொதுச் செயலாளர் ஆயிட்டேன்” என்று நிறைந்து பேச துரைமுருகனை ‘நல்லா இருப்படா’என்று சொல்லி வாழ்த்தியிருக்கிறார் சித்தர். அவர் அனைவரயும் வாடா போடா என்றுதான் பேசுவாராாம.

காட்பாடியிலிருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் 19 ஆவது கிலோட்டரில் மகாதேவ மலை என்ற சிறு மலையிருக்கிறது. அங்கே இருப்பவர்தான் ஸ்ரீலஸ்ரீ மஹாமஹா ஆனந்த சித்தர். இவருக்கு துரைமுருகன் பல ஆண்டுகளாக பழக்கம். துரைமுருகனையே வாடா போடா என்று அழைக்கும் அளவுக்கு உரிமையானவர் அந்த சித்தர். திமுகவினர் பலரிடமும் இந்த சித்தர் பற்றி சொல்லி அவர்களையும் சித்தரின் பக்தர்களாக்கியிருக்கிறார் துரைமுருகன்.

துரைமுருகனின் அறிமுகத்தால் அதிமுகவில் பலரும் கூட இந்த சித்தரை நோக்கிச் சென்று வருகிறார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த் நின்றபோது துரைமுருகன் தேர்தல் செலவுக்குப் பணம் கொடுக்க மறுக்கிறார் என்று கட்சிப் பிரமுகர்களும், பல மாசெக்களும் புலம்பினார்கள்.

மாவட்டச் செயலாளர்களின் இந்தப் புலம்பலை துரைமுருகனின் குடும்பத்தினர் சிலரே வீடு தேடிச் சென்று அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு துரைமுருகன் சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘இதப் பாருங்க. மஹாமஹா ஆனந்த சித்தரே சொல்லிட்டாரு, யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் உம் பையந்தான் வேலூர்லேர்ந்து டெல்லிக்கு போகப் போறான்னு சொல்லிட்டாரு. சித்தரே சொல்லிட்டாரு அப்புறம் என்னய்யா?’ என்று அன்றைக்கு சொன்னவர் துரைமுருகன்.

You may also like
நீட் தேர்வு குறித்து ஸ்டாலின் அறிக்கை
எம்எல்ஏ தங்கம் தென்னரசு மற்றும் தற்போதைய எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தாயாருமான ராஜாமணி அம்மாள் நேற்று காலமானார்.
ஜிஎஸ்டி இழப்பீடு செய்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – முக ஸ்டாலின்
குடும்ப அரசியலை எதிர்த்து அதிலேயே ஐக்கியமான திமுக

Leave a Reply