Home > அரசியல் > திமுக அதிருப்தியாளர்களை அரவணைக்கும் முயற்சியில் திமுக

திமுக அதிருப்தியாளர்களை அரவணைக்கும் முயற்சியில் திமுக

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் அதற்கான பணிகளை திமுக முடுக்கி விட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திமுகவிலிருந்து விலகிச் சென்றவர்கள், அதிருப்தி காரணமாக ஒதுங்கியிருப்பவர்களை மீண்டும் கட்சிக்கு கொண்டு வர வேண்டுமென முடிவு செய்யப்பட்டு, அதற்கான பொறுப்பை தலைமைக் கழக முதன்மைச் செயலாளரான நேருவிடம் ஒப்படைத்துள்ளது திமுக தலைமை.

இதனையடுத்து, தனது பணிகளை உடனடியாகத் துவங்கிய நேரு, முதல்கட்டமாக ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முல்லை வேந்தனிடம் பேசியிருக்கிறார்.

திமுக தலைமை மீதுள்ள விரக்தியால் தேமுதிகவுக்குப் போன முல்லை வேந்தன் கலைஞர் மறைவுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் திமுகவுக்கே திரும்பினார். முல்லையோடு மு.க. அழகிரி பேசிக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்த நிலையில் தான் துரைமுருகனும், முரசொலி செல்வமும் அவரிடம் பேசி திமுகவுக்கு திரும்பவும் கொண்டுவந்தார்கள். சில மாதங்களாகச் சுறுசுறுப்பாக பணியாற்றிய முல்லைவேந்தன் பிறகு திமுகவிலிருந்து ஒதுங்கினார்.

தேர்தல் சமயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த முல்லை வேந்தன் ‘உங்களை பார்த்து ஆசி வாங்கிட்டு சீட் கேட்டு பணம் கட்டலாம்னு வந்தேன்’ என்று சொன்னதும், எடுத்த எடுப்பிலேயே… ‘நீங்க உறுப்பினர்தானே, போய் எ.வ.வேலுவை பாருங்க’ என்று நோஸ்கட் செய்துவிட்டார் ஸ்டாலின்.

வெளியே வந்தவர் எங்கேபோவது என்று தெரியாமல் துரைமுருகன் வீட்டுக்குச் சென்று அவரைப் பார்த்து, ‘அண்ணே நான் அவசரப்பட்டு வந்து சேர்ந்துட்டேனோனு தோணுது’ என்று வருத்தப்பட்டிருக்கிறார். துரைமுருகனும் அவரை சமாதானப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்”  அதன்பிறகு திமுகவிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கியிருந்தார் முல்லைவேந்தன். எனினும், கலைஞர் நினைவு நாள் உள்ளிட்டவற்றிற்கு அஞ்சலி செலுத்தி, அந்த புகைப்படங்களை தனது ட்விட்டரில் பதிவேற்றி வந்தார்.இந்த நிலையில்தான் இப்போது முல்லை வேந்தனிடம் பேசிய கே.என்.நேரு, இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே இருப்பீர்கள்.

நீங்க திமுகவுக்கு மறுபடியும் திரும்ப வேண்டும். அடுத்து திமுகதான் ஆட்சிக்கு வர இருக்கிறது. உங்களுக்கு வேண்டியவற்றை செய்துகொடுக்கிறோம்.

அந்த பகுதியிலுள்ள அதிருப்தியாளர்களையும் நீங்கள் அழைத்துப் பேசுங்கள். தேர்தலில் சீட் கொடுப்பது பற்றியும் பேசலாம்.

பால் பொங்கி வரும் நேரத்தில் வீணடிக்க வேண்டாம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.ஆனால் தற்போதைய தருமபுரி மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் ஆலோசனைப்படி செயல்படுபவர்கள். ஆனால், முல்லை வேந்தன் திமுகவிலிருந்து ஒதுங்கியதற்கு காரணமே தன்னை விட ஜூனியரான எ.வ.வேலுவை ஸ்டாலின் சந்திக்கச் சொன்னதற்காகத்தான். ஆகவேதான் முன்பு சிலர் திமுகவில் இணையப் பேசியபோதுகூட தயக்கம் காட்டினார்.

இப்போது கே.என்.நேரு அழைப்பு விடுத்துள்ளதால் திமுகவில் இணைவது தொடர்பாக தனது ஆதரவாளர்ளுடன் சில நாட்களாக மொரப்பூர் ஒன்றியம் கம்பைநல்லூரிலுள்ள தனது பண்ணை வீட்டில் ஆலோசனை நடத்தி இருக்கிறார் முல்லை வேந்தன். அப்போது, “முதன்மைச் செயலாளர் நேரு என்னிடம் திமுகவில் இணைவது பற்றி பேசினார். பொறுப்பு கொடுக்கிறார்களோ இல்லையோ ஆட்சிக்கு வந்தால் நமக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்கலாம்” என்றெல்லாம் பேசியிருக்கிறார். 

You may also like
நீட் தேர்வு குறித்து ஸ்டாலின் அறிக்கை
தாயார் தவுசாயம்மாள் மறைவு : முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்
“வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் தேவை” – மு.க ஸ்டாலின்
அண்ணா பல்கலைக்கழக
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம்..

Leave a Reply