Home > அரசியல் > அரசியல் பேராசையை முதல்வர் வெளிப்படுத்தியிருக்கிறார் – மு.க.ஸ்டாலின்

அரசியல் பேராசையை முதல்வர் வெளிப்படுத்தியிருக்கிறார் – மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தேர்தல் வழக்கு குறித்து பேசிய முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து கூறியுள்ள மு.க.ஸ்டாலின், “எனது கொளத்தூர் தேர்தல் வழக்கு பற்றி முதல்வர் பேசியது அவர் விரக்தியில் இருப்பதை காட்டுகிறது. உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த ஒரு வழக்கை மேற்கொள்காட்டி முதல்வர் பேசியது கண்டிக்கத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீடு பற்றி தீர்ப்பு வழங்குவது போல் முதல்வர் பேசியுள்ளார். என்னாலும் நிறைவேறவே முடியாத தன் அரசியல் பேராசையை முதல்வர் வெளிப்படுத்தியிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுகவின் தற்போதைய தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ஸ்டாலினை எதிர்கொண்ட அதிமுகவின் சைதை துரைசாமி ஸ்டாலினின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதில் ஸ்டாலின் வெற்றி செல்லும் என நீதிபதி வேணுகோபால் அறிவித்து இந்த வழக்கை முடித்து வைத்தார்.

இருப்பினும் இந்த வழக்கில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சைதை துரைசாமி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் ஸ்டாலினுக்கும், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் கடந்த மூன்றாண்டுகளாக இவ்வழக்கு விசாரணைக்கு வராமல் கிடப்பில் உள்ளது.

இதுகுறித்து விருதுநகரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி, கொளத்தூர் தேர்தல் வழக்கில் சூழல் மாறினால் 6 ஆண்டுக்கு ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட முடியாது. என விமர்சித்து இருந்தார். முதல்வரின் இந்த பேச்சுக்கே ஸ்டாலின் தற்போது பதிலடி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

You may also like
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு
அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் – ஸ்டாலின்
காமெடி சேனல் நடத்திக்கொண்டிருக்கிறார் செல்லூராஜூ – மு.க.ஸ்டாலின்
கமல் ஹாசன் பிறந்தநாள் : மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Leave a Reply