Home > அரசியல் > ஒன்றிய மாவட்டப் பொறுப்புகளுக்கு சாதிகளுக்கு உரிய பிரிதிநிதித்துவம் – திமுகவில் கோரிக்கை

ஒன்றிய மாவட்டப் பொறுப்புகளுக்கு சாதிகளுக்கு உரிய பிரிதிநிதித்துவம் – திமுகவில் கோரிக்கை

திமுக தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் நிலையில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்றும், 10 ஊராட்சிகளுக்கு ஒரு ஒன்றியச் செயலாளர் என்றும் இயற்றப்பட்ட பொதுக்குழு தீர்மானம் உள்ளபடியே சிறந்ததொரு அரசியல் வியூகமாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

ஏற்கனவே இருந்த மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரை இல்லாமல் பல மாவட்டங்களில் 02 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை மு.க.ஸ்டாலின் நியமித்து வருகிறார். மாவட்ட செயலாளர்களில் ஒரு சிலருக்கு மட்டும் 3-4 தொகுதிகள் என தலைமை விட்டுக் கொடுத்தால் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என பிரித்த மாவட்டங்களில் அந்த மாவட்டச் செயலாளர்களுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாகி தேர்தல் நேர களப்பணியில் ஒரு வித மனசோர்வு உண்டாக வாய்ப்பு உள்ளது.

40 வயதுக்கும் குறைவான நபர்களை பதவியில் உள்ள மாவட்ட செயலாளர் பரிந்துரை செய்கிறாரே என தலைமை முடிவு செய்து வயது குறைந்த நபருக்கு வாய்ப்பு கொடுத்தால் அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட பேரூர், நகர, ஒன்றிய செயலாளர்கள் 50 வயதைக் கடந்தவர்களாக இருப்பார்கள். அதில் ஒருவரை நியமித்தால் கட்சி பணி வேகமாக நடைபெறும்.

மாவட்ட செயலாளர்களுக்கான வயது வரம்பு குறைந்த பட்சம் 45 வயது என நிர்ணயித்து செயல் வடிவம் தரலாம். அதேவேளையில் 70 வயது கடந்தவர்களுக்கு மாவட்ட, ஒன்றிய செயலாளர் பதவி என்பதை தவிர்த்து அவர்களுக்கு பொதுக்குழு, செயற்குழு பதவி கொடுத்து அவர்களின் அனுபவத்தை கட்சி பயன்படுத்தி கொள்வது தேர்தல் நேரத்தில் பயன் உள்ளதாக அமையும்.

ஒன்றியத்தில் குறைந்தது 25 முதல் 30 ஊராட்சிகள் வரும். திமுக ஊராட்சி செயலாளர் பதவியை ரத்து செய்து கிளைச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்துள்ளது சிறப்புதான். அதே வேளையில் ஒன்றியத்தில் உள்ள கிளை கழகங்களில் கிளைச் செயலாளர்- பிரதிநிதிகளில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லாத நிலையில், அந்த சமூகத்தை சார்ந்தவரை ஒன்றிய செயலாளராக நியமிப்பது எப்படி சரியாக இருக்கும். எனவே, ஒரு ஒன்றியத்தில் பெரும்பான்மையான கிளைச் செயலாளர் அல்லது பிரதிநிதிகள் உள்ள சமூகத்தை சார்ந்தவருக்கு ஒன்றிய செயலாளர் , துணை செயலாளர் பொறுப்பு வழங்குவதே சரியாக இருக்கும்.

எந்த முடிவாக இருந்தாலும் தலைமைக்கழகம் விரைந்து முடிவு எடுத்தால் தொண்டர்கள் எழுச்சியுடன் செயல்படுவார்கள்.

You may also like
வேல் யாத்திரைக்கு போட்டியாக திமுக தேர்தல் பிரச்சாரம் – எல்.முருகன்
நிவர் நிவாரணம் துரிதப்படுத்தபடவேண்டும் – மு.க.ஸ்டாலின்
கனிமொழியிடம் உதயநிதி வாழ்த்துப்பெற்றார்!
நிவர் நிவாரண பணிகள் – கடலூரில் முதல்வர் சென்னையில் துணை முதல்வர்

Leave a Reply