Home > அரசியல் > பாஜக பிரமுகரை பங்கமாக கலாய்த்த திமுக உடன்பிறப்பு!

பாஜக பிரமுகரை பங்கமாக கலாய்த்த திமுக உடன்பிறப்பு!

திமுக அமைச்சரவை பதவியேற்பில் அனைத்து அமைச்சர்களும் உளமார உறுதி ஏற்பதாக கூறி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டனர்.

இதை கோவையைச் சேர்ந்த பாஜக பிரமுகரான எஸ்.ஆர்.சேகர் என்பவர் விமர்சித்திருந்தார். அறநிலையத் துறை அமைச்சரான சேகர்பாபுவும் எப்படி உளமார என்று உறுதி ஏற்கலாம். கடவுள் பெயரால் உறுதி ஏற்காத அவர் எப்படி அறநிலையத் துறைக்கு பொறுப்பேற்கலாம் என்று வழக்கம்போல சங்கித்தனமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

அவருடைய பதிவில் சென்று பதிலளித்த திமுக உடன்பிறப்பான சித்தன் ஆனந்தகுமார் மரணமாய் கலாய்த்திருந்தார். அவருடைய கலாய்ப்பு வைரலாகியுள்ளது.

அவருடைய பதிலில், அறநிலையத்துறை அமைச்சர் கடவுளின் பெயரால் உறுதியெடுத்தால், மின்சாரத்துறை அமைச்சர் மின்கம்பியை கடித்தும், நீர்வள்த்துறை அமைச்சர் ஆத்தோரம் நின்றும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆத்திசூடி ஒப்பித்தும் உறுதி ஏற்கனுமா என்று கேட்டுள்ளார்…

Leave a Reply