Home > அரசியல் > திமுக கூட்டணி 201 இடங்களில் வெற்றி பெறும் – அமெரிக்க நிறுவனம் கணிப்பு!

திமுக கூட்டணி 201 இடங்களில் வெற்றி பெறும் – அமெரிக்க நிறுவனம் கணிப்பு!

இன்றைய நாளில் இறுதி செய்யப்பட்ட தமிழக வாக்காளர் பட்டியல் படி 2021 சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக தேர்தல் ஆணையம் அறிவித்த கணக்குப்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6,13,06,638. இவர்களில் 3,02,54,172 பேர் ஆண்கள். 3,10,45,699 பேர் பெண்கள். மூன்றாம் பாலினம் 1,497 பேர். ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம் அதிகம்.

மேலே கண்ட ஆறு கோடியே 13 லட்சம் வாக்களர்களில் ஏறத்தாழ 10 % , அதாவது 60 லட்சம் வாக்காளர்கள் போலி வாக்காளர்கள். பிறிதோர் 15 % வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத அல்லது வாக்களிக்க வாய்ப்பில்லாத, அல்லது வாக்களிக்க விரும்பாதவர்கள்.

ஒரு வேளை அவர்கள் வெளிநாட்டில், வெளியூரில் வசிப்போராக இருக்கலாம். உள்நோயாளிகளாக மருத்துவ மனையில் அல்லது வாக்களிக்க விரும்பாத மேட்டுக்குடியினராக இருக்கலாம்.

அரசியல் கட்சிகள் மீது வெறுப்புற்றவர்களாகவும் இருக்கலாம்..! ஆக மொத்தம் இறுதியாக வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் வாக்குகளை செலுத்தப்போகும் வாக்காளர்கள் 75 % மட்டுமே.

1996 ல் பதிவான வாக்குகள் 69.95 %.
1999 ல் பதிவான வாக்குகள் 57.98 %
2004 ல் பதிவான வாக்குகள் 60.81 %
2006 ல் பதிவான வாக்குகள் 70.56 %
2009 ல் பதிவான வாக்குகள் 73.02 %
2011 ல் பதிவான வாக்குகள் 77.80 %
2014 ல் பதிவான வாக்குகள் 73.74 %
2016 ல் பதிவான வாக்குகள் 74.26 %
2019 ல் பதிவான வாக்குகள் 72.44 %
மேற்கண்ட புள்ளி விவரங்கள் படி பார்த்தால் 2009 லிருந்து வாக்குப்பதிவு சதவீதம் 70 % ற்கும் மேலேயே வந்திருக்கிறது.

ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை திமுகவிற்கு நிகரான கட்சியாக களத்தில் நின்ற அதிமுக அதன் பிறகு தொடர் சரிவை மட்டுமே சந்தித்து வருகிறது.

துக்ளக் குருமூர்த்தி சொல்வது போல திமுக, அதிமுக விற்கு எதிரான வாக்குகள் ஒன்றும் புதிதாக உருவாகி வந்து விடாது. அதற்கான வாய்ப்பும் இல்லை. 2006 ல் விஜயகாந்த் தனித்து தேர்தலில் போட்டியிட்ட நாளிலிருந்தே திமுக, அதிமுக விற்கு எதிரான வாக்குகள் ஒன்று சேர்ந்து விழ ஆரம்பித்தாயிற்று..!! அதற்கும் முன்னோக்கிப் பார்த்தால் 1996 ல் வைகோ தனிக்கட்சி கண்ட போதே அந்த மூன்றாவது அணிக்கான வாக்குகள் தன் முகம் காட்டதுவங்கி விட்டது.

எப்போதுமே களத்தில் உள்ள அந்த வாக்குகளை ஒருங்கிணைத்தால் மட்டுமே இன்னொரு கட்சி இங்கே போட்டிக்கே வரமுடியும்..! அப்படி ஒரு நிலை வரவேண்டுமாயின் ரஜினி, கமல், சீமான், அமமுக, இடது சாரிகள், வலது சாரிகள், பாஜக, காங்கிரஸ், விசிக, மதிமுக , பாமக மற்றும் இதர சாதி கட்சிகள் எல்லாம் ஓரணிக்கு வந்தால் பதிவாகும் வாக்குகளில் 25 லிருந்து 30 % பெறலாம். இது சாத்தியமா..?

ரஜினி கட்சிக்கு அதிமுகவிலிருந்து வாக்குகள் பிரிவதற்கே கூடுதல் வாய்ப்பு உண்டு. அப்படியே அதிமுகவில் ஒரு வாக்கு பிளவு ஏற்பட்டாலும் அதில் கணிசமான வாக்கு சதவீதம் திமுகவை நோக்கி வரும்.

அவ்வாறு வரும் நிலையில் திமுகவின் சொந்த வாக்குபலம் 40 % தொட்டுவிடும். அப்புறம் கூட்டணி கட்சிகளின் பலம் ஏறத்தாழ 15 % ஆக மொத்தம் 55 % வாக்குகளைப் பெற்று 2019 நாடாளுமன்ற தேர்தலில் கழகம் ஈட்டிய வெற்றியை 2021 சட்டமன்ற தேர்தலிலும் ஈட்டுவது உறுதி..!!

எதிரணிகளோ மீதமுள்ள 45 % வாக்குகளை பங்கு போட்டுக்கொள்ள வேண்டிய நிலை வரும். ஒரு மிகப்பெரிய கலவரமோ, படுகொலையோ நிகழாத பட்சத்தில் நம் இந்த கணக்கே 2021 ல் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும். இந்த முடிவை மாற்ற பாஜக ரஜினியை அரசியலில் இறக்கி ஓரிரு வாரங்களில் அவரை மருத்துவமனையில் படுக்க வைத்து நாடகமாடலாம். அப்போது கூட ரஜினி ஆதரவாளர்களின் கோபம் பாஜகவிற்கு எதிராக திரும்புமேயன்றி திமுக மீது வராது.

ஏனெனில் ரஜினியை கட்டாயப்படுத்தி அரசியலுக்கு இழுத்து வந்து அவரை பலி கொடுக்க திட்டமிட்டது அமித்ஷா, மோடி கூட்டணிதான் என்பது பைத்தியக்கரனுக்கு கூட தெரியும்..!

இன்றைய நிலையில் பார்ப்பனர்களின் சதிக்கு இரையாகி அழியபோவது அதிமுக என்ற போலி திராவிடமே..! திமுக எனும் எஃகு கோட்டையை எவனாலும், எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது.

வேண்டுமானால் நாங்கள் தான் திமுகவிற்கு எதிர்க்கட்சி என்று மார்தட்டிக்கொள்ள அவர்களின் அரசியல் வியூகம் உதவலாம்..! அந்த வியூகத்தை எவ்வித சிரமும் இல்லாமல் தமிழக வாக்காளர்கள் உடைத்தெறிவார்கள்..!!

– தமிழரிமா வனத்தையன்

You may also like
புதுச்சேரி முதல்வர் வேட்பாளராகும் ஜெகத்ரட்சகன் பதறும் காங்கிரஸ்!
முஸ்லிம் லீக் கேட்ட 16 க்கு மு.க.ஸ்டாலின் பதில் என்ன?
திமுக எதிர்ப்பால் குப்பை கொட்டும் வரியை வாபஸ் பெற்றது மாநகராட்சி

Leave a Reply