Home > அரசியல் > செங்கோட்டையனிடம் எகிறிய எடப்பாடி கே.பழனிச்சாமி

செங்கோட்டையனிடம் எகிறிய எடப்பாடி கே.பழனிச்சாமி

முதல்வர் எடப்பாடி கடந்த நான்கு நாட்களாக சேலத்தில் முகாமிட்டிருக்கிறார். இன்று (டிசம்பர் 19) நங்கவள்ளி ஒன்றியத்தில் உள்ள சென்றாயன் பெருமாள் கோயிலில் இருந்து பிரச்சாரம் தொடங்கினார்.

உற்சாகமாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க முதல்வர் ஆயத்தமான நிலையில்தான், முதல்வரின் சேலத்து வீட்டு வாசலில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது.

தன் வீட்டு முன் போராட்டம் என்ற தகவல் கேட்டு முதல்வர்  என்ன விவரம் என்று கேட்டபோது, 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது வரை பணி ஒதுக்கப்படாததால் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தான் போராடி வருகிறார்கள் என்று முதல்வருக்கு சொல்லப்பட்டது.

தமிழகத்தில் 2013ஆம் ஆண்டு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெற்றது.

அதில், தேர்ச்சி பெற்ற சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 7 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படாததால் தேர்வு எழுதிக் காத்திருப்பவர்களுக்கு விரைவில் ஆணை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர்.

அவர்கள் இன்று அதிகாலை முதலே முதல்வர் இல்லத்தின் முன் திரண்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் காவல்துறை மூலம் அறிந்துகொண்ட முதல்வர், பிரச்சாரம் தொடங்கும்போதே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனை தொடர்பு கொண்டு என்னண்ணே.

இப்படி என் வீட்டு முன்னாடியே ஆசிரியர்கள் போராட்டம் நடத்துறாங்க?என்று கேட்க, செங்கோட்டையன் சமாளித்திருக்கிறார் தன் குரலை உயர்த்திய முதல்வர், இங்க பாருங்கண்ணே.

உங்க துறையாலதான் இன்னிக்கு அரசுக்கு கெட்ட பேரு வந்திருக்குது. உங்களால கட்சிக்கும் கெட்ட பேரு. உங்க தொகுதியிலயே ஒன்றிய செயலாளர்களாம் கட்சியை விட்டுப் போயிட்டிருக்காங்க.

இப்ப உங்க துறை பிரச்சினையால தான் என் வீட்டு முன்னாடியே போராட்டம் நடத்துறாங்கண்ணே…

இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லைண்ணே, என்று செங்கோட்டையனிடம் சத்தம் போட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 

Leave a Reply