Home > அரசியல் > செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுகவினரே பாஜகவில் சேரும் அவலம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுகவினரே பாஜகவில் சேரும் அவலம்!

செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டு 09 மாதங்கள் ஆகின்றன. இதுவரை தி.மு.க.வில் பொறுப்பாளர் நியமிக்கப்படவில்லை. இத்தனைக்கும் செய்யூர், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்றன..

திமுகவில் மாவட்டப் பொறுப்பாளர் இல்லாத காரணத்தால் மதுராந்தகத்தைச் சுற்றியுள்ள கிராம கிளைகளில் தி.மு.க.வை சேர்ந்தவர்களே பா.ஜ.க.வில் சேர்க்கப்படுகிறார்கள்.

இது திமுக தலைமைக்கு தெரியுமா என்று தெரியவில்லை. மதுராந்தகமும் ,செய்யூர் தொகுதியும் தனித் தொகுதிகள் ஆகும். ஆனால், இந்த மாவட்டத்தில் ஒரு தலித் ஒன்றிய செயலாளர்கூட இல்லை. இதைப் பயன்படுத்தி, பாஜக தனது கட்சி சார்பில் தலித் ஒன்றியச் செயலாளரை நியமித்தது. அவரைக் கொண்டு தலித் மக்களை பாஜகவில் சேர்க்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, மத்திய அரசு திட்டங்களைப் பெற்றுத்தருவதாக கூறி, திமுக இளைஞர்களையே பாஜகவில் சேர்க்கும் பணியை தீவிரமாக முடுக்கி விட்டுள்ளார்கள்.

இனியாவது திமுக தலைமை உரிய நடவடிக்கை எடுக்குமா பார்க்கலாம்.

You may also like
உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
கலவரம் செய்தால்,கோமியம் குடித்தல்,இதில் புதிய இணைப்பு – உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
ஆறுமுகசாமி ஆணைத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடையவுள்ளது.
இந்தியாவின் மூத்த மொழிக்கு தொல்லியலில் கூட மரியாதையில்லையா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்
திமுகவின் குடும்ப அரசியல் – #DMK #HITORY_OF_FAMILY_POLITICS_IN_INDIA -PART-2

Leave a Reply