Home > அரசியல் > காசுக்காக கூடுவது கும்பல் லட்சியத்திற்காக திரள்வது புரட்சி – கமல்ஹாசன்

காசுக்காக கூடுவது கும்பல் லட்சியத்திற்காக திரள்வது புரட்சி – கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன்

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை கமல்ஹாசன் இன்று துவங்கினார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் அதற்காக தயாராகி வருகின்றன.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை மதுரையில் இன்று (டிசம்பர் 13) துவங்கினார்.

சென்னையிலிருந்து விமானம் மூலமாக மதுரை வந்த கமல்ஹாசன் அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது, நாங்கள் சட்டத்துக்கு உட்பட்டு எப்படியெல்லாம் பிரச்சாரத்துக்குத் திட்டமிட்டு இருந்தோமோ, அதன்படியே எங்கள் பிரச்சாரம் இருக்கும். சில இடங்களில் மட்டுமே தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என்றார்.

புதிய ஒரு நல்ல சீரமைத்த தமிழகத்தை பற்றி தான் பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்தப்படும் என்றும்,தமிழகம் ஏற்கனவே சீரழிந்துவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அது மக்களுக்கே தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர் வெளியே வந்த கமல்ஹாசனுக்கு அப்பகுதியில் மக்கள் நீதி மய்யத்தினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். திறந்த வேனில் நின்றபடி அவர்களின் வாழ்த்துக்களை கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டார்.

இதுதொடர்பாக கமல் தனது ட்விட்டரில், “காசுக்காகக் கூடுவது கும்பல்; லட்சியத்திற்காகத் திரள்வதன் பெயர் புரட்சி. மக்கள் புரட்சியை மதுரையில் நிகழ்த்திக் காட்டிய எம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும், அணிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். எதுவும் தடையில்லை. தமிழகத்தை சீரமைப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மதுரை மேலமாசி வீதியில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், திறந்த வேனில் நின்று வணக்கம் கூறியபடியே வாக்கு சேகரித்தார். எனினும், அப்போது கமல்ஹாசன் மக்களிடையே உரையாற்றவில்லை

You may also like
கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் மதுரையில் தொடங்குகிறார்
கமலுக்கு வில்லனாகும் மலையாள நடிகர்
நடிகர் கமல்ஹாசன்
மநீம – விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக – கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
பாஜக – ஆர்எஸ்எஸ்சுக்கு முறை வாசல் செய்யும் கமல்

Leave a Reply