Home > அரசியல் > எம்.ஜி.ஆர் மடியில் வளர்ந்தவன் நான் கமல்ஹாசனின் புது ரூட்டு

எம்.ஜி.ஆர் மடியில் வளர்ந்தவன் நான் கமல்ஹாசனின் புது ரூட்டு

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த 13ஆம் தேதி மதுரையில் துவங்கினார். அப்போது அரங்கக் கூட்டம் ஒன்றில் பேசிய கமல், மதுரையை இரண்டாவது தலைநகராக்க எம்.ஜி.ஆர் விரும்பியதாக குறிப்பிட்டார்.

அத்துடன் எம்.ஜி.ஆரின் நீட்சி நான் எனவும், மதுரையை இரண்டாம் தலைநகராக்குவேன் என்றும் விவரித்தார்.

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரை ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாஜகவினர் சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறினார்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று டிசம்பர் 15 அன்றுபிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் பேசியபோது எம்.ஜி.ஆர் எங்கள் சொத்து. அவர் மடியில் அமர்ந்தவன் நான் என்று கூறினார்.

அடுத்த சிறிது நேரத்தில் எம்.ஜி.ஆர் தனக்கு பொன்னாடை அணிவித்து நெற்றியில் முத்தமிடும் வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்த கமல்ஹாசன், புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல, தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம்.

எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும். எதுவும் தடையல்லஎன்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply