Home > அரசியல் > தம்பிகளின் தல வரலாறு . பாகம் 2.

தம்பிகளின் தல வரலாறு . பாகம் 2.

கிறிஸ்தவத்தில் உலகலாவிய அதிகாரம் அமைப்பு கொண்டது ரோமன் கத்தோலிக்க பிரிவு. அதன் தலைமை பீடம்தான் ரோம். அதன் தலைவர் பாப்பரசர் எனப்படும் போப்பாண்டவர். இவர் மேற்கொள்ளும் சர்வதேச பயணங்கள் அனைத்தும் அமெரிக்க அதிபரின் பயண ஏற்பாடுகளுக்கு சற்றும் குறைவில்லாதது.

கிறிஸ்தவ பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ள கூடாது என்று பைபிளில் எங்குமே சொல்லப்படவில்லை. ரோமன் கத்தோலிக்கப் பிரிவின் கிறித்தவ பாதிரியார்களுக்கு குடும்ப வாழ்க்கையை தடை செய்திருக்கும் காரணம் பலருக்கும் புரிவதில்லை. பல்வேறு அதிகார அமைப்புகளை இந்தப் பாதிரியார்களே நிர்வாகம் செய்கின்றனர். தன் குடும்பம், தன் சொந்தங்களுக்கு என்று அவர்கள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துவிட வாய்ப்புகள் உண்டு என்பதே முதன்மையான காரணம்.

இந்தப் பாதிரியார்களுக்கு படிக்க விரும்பும் இளைஞர்களை பெரும்பாலும் அவர்கள் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே தேர்ந்தெடுத்து விடுவார்கள். அவர்களுக்கான வாழ்வியல் தயாரிப்பு அப்போதே தொடங்கிவிடும். அதில் முக்கியமானது எல்லோரிடமும் சமமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதும், தலைமைக்கு கீழ்ப்படிதலும், திருச்சபையின் ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதுமேயாகும். மொத்தத்தில் நீ உன்னையே நேசிப்பதுபோல் பிறர் அனைவரையும் நேசிக்க வேண்டும் என்பதாகும்.

இவர்களுக்கு சில கட்டாய விதிமுறைகள் உண்டு. அவற்றில் முக்கியமானது , இவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினாலோ, அரசியலில் ஈடுபட விரும்பினாலோ அல்லது திருச்சபை அமைப்பின் கொள்கைகளில் முரண்பாடு தோன்றினாலோ எப்போது வேண்டுமானாலும் சபையிலிருந்து வெளியேறி தங்கள் விருப்பம்போல வாழ்ந்துகொள்ள எந்தத்தடையும் இல்லை. அந்த வெள்ளை அங்கி அணிந்துகொண்டு இதுபோன்ற காரியங்களைச் செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசியலில் கிறிஸ்தவ தலைமை அமைப்பின் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி என்று எதுவும் இல்லை. அதற்கு அனுமதி எக்காலத்திற்கும் கொடுக்கவும் மாட்டார்கள். ஆனால் அன்றாட அரசியல் போக்கின் தன்மைக்கேற்ப சில ஆலோசனைகள் வெளியிடுவார்கள். அதுபோல இந்த தேர்தலுக்கு ஆலோசனை செய்து முடிவெடுக்க இரண்டு நாட்களுக்கு முன்பாக திருச்சியில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக நிர்வாக அமைப்பில் இருக்கும் பாதிரியார்கள் அழைக்கப்ப்டிருந்தனர்.

அந்த ஆலோசனை கூட்டம் பேராயர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்ததபோது நடந்த சம்பவம் அதிர்ச்சிகரமானது.

அரசியல் அதிகாரத்திற்கும், சுகபோக வாழ்க்கைக்கும், ஆசைப்பட்ட சில பாதிரியார்கள், தங்கள் ஆலயங்களுக்கு வரும் இளைஞர் இளம்பெண்களுக்கு அரசியல் ஆலோசனை வழங்குகிறோம் என்ற போர்வையில் நாம் தமிழர் கட்சிக்கு ஆள் பிடிக்கும் வேலையை அண்மைக்காலமாக வெளிப்படையாகச் செய்துள்ளனர். பாதிரியார்களுக்கு சமூகத்தில் இருக்கும் நற்பெயரின்பொருட்டு இந்தச் செயலை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுள்ளனர். அந்த தைரியத்தில் தங்களால் வளர்க்கப்பட்ட சில இளைஞர்களை திருச்சியில் நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைத்துச்சென்றதோடு மட்டுமில்லாமல் பேராயர் இருந்த மேடையில் புகுந்து இவர்களும் அந்த இளைஞர்களும் செய்த அடாவடித்தனத்தினால் அந்தக் கூட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் என்ற பெயருடைய அந்த ஆலோசனை அமைப்பின் பெயரில், ‘’தமிழ்தேசிய’’ என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும் என்றும், நாம்தமிழர் கட்சிக்கு கிறிஸ்தவ தலைமைபீடம் வெளிப்படையான ஆதரவு வழங்க வேண்டும் என்பதை வழியுறுத்தி இந்த ஈனச்செயலை அறங்கேற்றியுள்ளனர்.

கீழ்ப்படிதல் எனும் ஒற்றை வார்த்தையின் கீழ் இயங்கும் கத்தோலிக்க அமைப்பில் பத்து வருடம் ஞானவியல் எனும் படிப்பை படித்து முடித்துதான் இவர்கள் பாதிரியார் ஆக்கியுள்ளனர். இவர்களுக்கு எம் சார்பில் கேட்கப்படும் ஒரே கேள்வி…

கிறித்தவ பாதிரியார் எனும் போர்வையில், சமூக அந்தஸ்துடன், தங்கள் கொள்கைக்கு முரணாகச் செயல்படும் நீங்கள் பாதிரியார் என்ற பட்டத்தைத் துறந்து பொது மனிதராக நீங்கள் விரும்பும் எதையும் செய்துவிட்டுப்போங்கள். எங்களுக்குப் பிரச்சனை இல்லை. உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்காக கிறித்தவத்தை பயன்படுத்தாதீர்கள். பாதிரியார் வேடத்தில், வெள்ளை அங்கியில், நாம்தமிழர் கட்சி மேடையில், தொண்டை கிழியக் கத்தும் உங்களை, எவனோ ஒருவன் செருப்பால் அடித்தால், அப்போது உங்களை பாதிரியாராகப் பார்க்க வேண்டுமா? அரசியல்வாதியாகப் பார்க்க வேண்டுமா?

கிறிஸ்தவத்தில் களையெடுப்பு நடத்தப்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேற்கூறிய பிரச்சனைக்கு காரணமான சில நூறுபேர்கள் கொண்ட பாதிரியார்களில் முக்கியமான மூவர் பெயரையும், நாம் தமிழர் கட்சி மேடையில் சேசுராஜ் எனும் பாதிரியார் பேசிய சாம்பிள் வீடியோவையும் இங்கே இணைத்துள்ளேன்.

1. Fr. Jesuraj M.P.
Adaikala matha church,
Tirunelveli Town.

2. Fr. Sahayaraj K
St. Britto Matrculation School. Madurai.

3. Fr. Muthu M
Holy Redeemer’s church,
Madurai.

உங்களுக்கும் உங்களோடு சேர்ந்த கூட்டத்தின் பாதிரியார்களுக்கும் பணிவான வேண்டுகோள். கிறிஸ்தவ மதம் சார்ந்த பணியா? நாம் தமிழர் கட்சி சார்ந்த பணியா? என்பதை முடிவு செய்துவிட்டு, அதனடிப்படையில் இயங்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். இரட்டை குதிரையில் சவாரி செய்ய நினைத்தால் தெருவில் நிறுத்தப்படுவீர்கள். தேவைக்கேற்ப அந்த மொத்தக் கூட்டத்தின் விவரங்கள் தொலைபேசி எண் உட்பட வெளியிடப்படும்.

-Arulraj

You may also like
உதயநிதி ஸ்டாலின் ஊர் சுற்ற வேண்டும்!
சீமான் அயோக்கியர் என்று சொல்ல பல காரணங்கள் உள்ளன..!
தம்பிகளின் தல வரலாறு. பாகம் # 1
வாக்குப்பதிவு எந்திரத்தை மாற்றிவிடுவார்களா?

Leave a Reply