Home > அரசியல் > காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தியை எப்போது விடுதலை செய்வீர்கள்? உச்சநீதிமன்றம் கேள்வி

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தியை எப்போது விடுதலை செய்வீர்கள்? உச்சநீதிமன்றம் கேள்வி

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை மூன்றாக பிரித்து மத்திய மோடி அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஒரு ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ள அவரை உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும், அவர் இன்னும் எத்தனை காலம் சிறையில் இருக்க வேண்டும் என்றும் அவருடைய மகள் இல்டிஜா முப்தி வழக்குத் தொடுத்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கவுல் மெஹ்பூபா எப்போது விடுதலை செய்யப்படுவார்? அவருடைய காவல் மேலும் நீடிக்கப்படுமா? என்று இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி காஷ்மீர் மாநில அரசுக்கு உத்தரவிட்டார். இந்த விசாரணையில் பங்கேற்ற காஷ்மீர் மாநில அரசு வழக்கறிஞர், “காஷ்மீரின் வரலாறு வன்முறை பின்னணியைக் கொண்டது. எனவே நீதிபதிகள் தங்கள் இஷ்டத்துக்கு ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது” என்றார்.

அவருக்கு பதிலளித்த நீதிபதி கவுல், காஷ்மீரின் வரலாறு அழகானது. ஆனால், ஒருவரின் காவலை அதிகபட்சமாக நீடிக்க போதுமான அடிப்படை ஆதாரம் இருக்க வேண்டும் என்று கூறினார்.

மெஹ்பூபாவுடன் காவலில் வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லாவும், உமர் அப்துல்லாவும் ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்டனர். பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வரானவர் மெஹ்பூபா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply