Home > அரசியல் > ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமை ஆனதாக தமிழக அரசு அரசிதழ் வெளியீடு

ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமை ஆனதாக தமிழக அரசு அரசிதழ் வெளியீடு

மறைந்த தமிழகமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இதையடுத்து அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து, அதற்கான சட்ட ரீதியான பணிகள் நடைபெற்று வந்தன. 
அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா இறுதிவரை வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்குவதற்காக அவரின் சட்டபூர்வ வாரிசுகளுக்குஇழப்பீடாக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் 68 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா வாழ்ந்த வீடு அரசுடைமையானது. தொடர்ந்து அதனை நினைவில்லம் ஆக்குவதற்கான பணிகளும் அதிவிரைவாக நடைபெற தொடங்கியிருக்கின்றன. 

ஜெயலலிதாவின் வேதா இல்ல வளாகத்தை பொறுத்தவரையில் அங்குள்ள அசையா சொத்துக்கள் ஏற்கனவே அரசு அதிகாரிகள் மூலம் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரசுடைமையானது என தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது. மேலும், ஜெயலலிதா வீட்டில் இருந்த பொருட்கள் குறித்த விவரங்களையும் அரசிதழில் வெளியிட்டுள்ளது. 4 கிலோ 372 கிராம் தங்கம், 601 கிலோ 424 கிராம் வெள்ளி, 162 வெள்ளி பொருட்கள், 6514 சமையல் பொருட்கள் 8,376 புத்தகங்கள் 394 நினைவு பரிசுகள் 11 டிவி, 10 பிரிட்ஜ் 38, ஏசி சாதனம் 556 பர்னிச்சர் 15 பூஜை பொருட்கள், 1055 காட்சி பெட்டி பொருட்கள்துணி, தலையணை, பெட்சீட், டவல் காலணி என 10,43829 தொலைபேசி/ கைபேசி 221 சமையல் மின்சார பொருட்கள், 251 மின்சார பொருட்கள் 6 கடிகாரம் என மொத்தம் 32,721 பொருட்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு துரிதமாகவேதா இல்லத்தை கையகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுதாரர்களில் ஒருவரான ஜெ.தீபா இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என சமீபத்தில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

You may also like
என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கத்தின் மனக்குமுறல்
ரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!!!
அற்புதங்களின் குவியல் அண்ணா!
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்

Leave a Reply