Home > அரசியல் > தமிழகத்திற்கு டார்ச்லைட் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு கமல்ஹாசன் மனு

தமிழகத்திற்கு டார்ச்லைட் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு கமல்ஹாசன் மனு

டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி முறையீடு செய்துள்ளது மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் தமிழகம் – பாண்டிச்சேரியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தேர்தலில் பல இடங்களில் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியது. தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலிலும் தங்களுக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்தது.

இந்த நிலையில் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சில நாட்களுக்கு முன்பு சின்னம் ஒதுக்கியது.

பாண்டிச்சேரியில் மட்டும் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது.

தமிழகத்தில் அந்த சின்னம் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது இதனால்டார்ச்லைட் சின்னம் இல்லை என்றால் நாங்கள் கலங்கரை விளக்கத்தை வாங்குவோம்.

சாதாரண ரூபத்தை விஸ்வரூபமாக மாற்றுகிறார்கள் என கமல்ஹாசன் கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழகத்திலும் தங்களுக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் இன்று (டிசம்பர் 17) தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டாலும் வேறொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டதால் மக்கள் நீதி மய்யத்திற்கு அதனை மாற்றுவது கடினமே.

எனினும், டார்ச் லைட் சின்னம் வைத்திருக்கும் கட்சியின் தலைவர் ஒப்புக்கொண்டால் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

Leave a Reply