Home > அரசியல் > ஆதரவு கேட்டு ரஜினி வீட்டுக்கு செல்ல தயாராகும் கமலஹாசன்

ஆதரவு கேட்டு ரஜினி வீட்டுக்கு செல்ல தயாராகும் கமலஹாசன்

சட்டமன்றத் தேர்தலின் போது ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார்

தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளராக இருந்த சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ். அண்மையில் தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்றார். இந்நிலையில் இன்று அவர் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களை கமல் சந்தித்தபோது, ரஜினி நேற்று நடத்திய கூட்டம் பற்றியும் அவரிடம் ஆதரவு கேட்பீர்களா என்றும் கேள்வி கேட்கப்பட்டது.

எனவே ரஜினி நலமாக இருக்க வேண்டியது என்பதற்குதான் நான் முன்னுரிமை கொடுப்பேன்.

நாங்கள் திரையுலகில் போட்டியாளர்களாக இருந்தோமே தவிர பொறாமைக்காரர்களாக இல்லை. அரசியலிலும் அது தொடரும், தொடரலாம்என்று  பதிலளித்தார் கமல்ஹாசன்.

ரஜினி நேற்று நடந்த மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தான் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை தனது உடல் நிலையை காரணம் காட்டி தெளிவுபடுத்தியிருந்த நிலையில் கமல் இன்று இவ்வாறு கூறியுள்ளார்.

You may also like
அரசியலுக்கு வருவேனா, இல்லையா என்பது பற்றி ஆலோசிக்க உள்ளேன் – நடிகர் ரஜினிகாந்த்
கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கல் இல்லை- கே.எஸ். அழகிரி
ரஜினிகாந்த் 15 நாட்கள் சென்னையில் தனிமைப்படுத்தி கொள்ள திட்டம்
வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?

Leave a Reply