Home > அரசியல் > உனது கடைசிக்காலம் மிக மோசமாக இருக்கும்டா நாயே…!

உனது கடைசிக்காலம் மிக மோசமாக இருக்கும்டா நாயே…!

பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோர் காலத்தின் பிள்ளைகள்…

அவர்களுக்கு கால் ஒரு பிரச்சனையே இல்லை…

அவர்களை எதற்காக காலம் பெற்றுப்போட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றிய உடன் அவர்களை தன்னிடம் அழைத்துக் கொண்டது…

ஒரு இனத்தின் பெருமையை மீட்டெடுக்க வழிகாட்ட பெரியாருக்கு கட்டளையிட்டது…

திராவிட இனம் மீள என்ன செய்ய வேண்டும் என்ற வழிகளை பெரியார் சொன்னார்…

அந்த வழிகளை சட்டபூர்வமாக்க ஒரு இயக்கத்தை கட்டும்படி அண்ணாவுக்கு காலம் கட்டளையிட்டது… அண்ணா அதன்படியே ஒரு அரசாங்கத்தை உருவாக்கினார்…

பெரியார் சொன்ன அனைத்தையும் நிறைவேற்றுவதற்குள் அண்ணாவை காலம் சீக்கிரமே தன்னுடன் அணைத்துக் கொண்டது…

அண்ணாவின் இடத்துக்கு கலைஞரை தேர்வு செய்ததுதான் காலத்தின் மிகப்பெரிய கருணை…

பெரியார் எண்ணங்களை தயவுதாட்சண்யமின்றி நிறைவேற்றும் முயற்சியை கண்ட கண்ட கழிசடைகள் தடுக்க முயற்சி செய்யும். அவற்றை எதிர்கொண்டு முறியடிக்க அண்ணா தேவையில்லை. அவருடைய தம்பி கலைஞர்தான் சரியான் ஆள் என்று காலம் கருதியது…

ஆம், அண்ணா இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால், கலைஞர் மீது வீசப்பட்ட சேறு முழுவதையும் அவர் மீது வீசியிருப்பார்கள்…

அவர் மறைந்த பிறகும் அவர் பெயரில் ஒரு கட்சியை தொடங்கிய முட்டாள் நடிகன் அவருடைய பெயரை நாறடிக்கவில்லையா?

அண்ணா பெயரில் தொடங்கப்பட்ட அந்தக் கட்சி அண்ணாவின் நோக்கங்களை இன்றைக்கும் சிதறடிக்கவில்லையா?

ஆனால், காலம் தேர்வு செய்த கலைஞர்தான் பெரியார், அண்ணா ஆகியோரின் நோக்கங்களை பாதுகாத்து, கட்சியையும் தமிழகத்தின் அரணாக்கி சென்றிருக்கிறார்…

இனி தமிழகத்தின் அரண் என்றும் திமுக என்றே கொண்டாடும் நிலையை உருவாக்கிய பின்னரே கலைஞரை காலம் அழைத்துக் கொண்டது…

காலத்தின் பிள்ளை என்பதால்தான் நடக்க முடியாவிட்டாலும். சக்கர நாற்காலியில் அமர்ந்தும் காலத்தின் கட்டளையை முழுவதுமாக நிறைவேற்றிச் சென்றிருக்கிறார் கலைஞர்…

நீயெல்லாம் அவருடைய மயிருக்குக்கூட ஆகமாட்டேடா…

உனது கடைசிக்காலம் மிக மோசமாக இருக்கும்டா நாயே…

You may also like
நல்லா கெளப்புறாய்ங்கடா பீதிய! – ஒரு சாமியாரின் புது சரடு!
உதயநிதி ஸ்டாலின் ஊர் சுற்ற வேண்டும்!
சீமான் அயோக்கியர் என்று சொல்ல பல காரணங்கள் உள்ளன..!
தம்பிகளின் தல வரலாறு . பாகம் 2.

Leave a Reply