Home > அரசியல் > பூரண மதுவிலக்கு இல்லை கமலஹாசன் அறிவிப்பு

பூரண மதுவிலக்கு இல்லை கமலஹாசன் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, நிர்வாக குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகசட்டமன்றத் தேர்தலுக்கான ஆறுமுக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளார் கமல்ஹாசன்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் தனது முதற்கட்ட சுற்றுப்பயணத்தை நேற்று மாலை மதுரை மேலமாசி வீதியில் தொடங்கினார்.

காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் பேசாமல் கையை அசைத்தபடி  பிரச்சாரம் மேற்கொண்டார்.

பின்னர் அரங்கக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில்தான் மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கினோம். அதனால் இங்கிருந்து பிரச்சாரம் செய்வதுதான் சரி என்பதால் இங்கு தொடங்குகிறோம்.

மக்கள் நீதி மய்யத்தின் நேர்மை மட்டுமே வாக்குறுதி. நேர்மையைக் கொண்டு தேர்தலில் வெல்வேன். ஆயத்தம் இல்லாமல் எந்த களத்திலும் இறங்க மாட்டேன். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.

இளைஞர்களை முதலாளிகளாக மாற்ற வேண்டும். அரசியலை மக்கள் கையில் எடுக்க வேண்டும். மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யும் அரசைத்தான் நாம் அமைக்க வேண்டும்.

ஊழல் ஒழிப்பு என்பது தனி மனிதனால் செய்ய முடியாது. மக்களின் ஒத்துழைப்போடு நிச்சயம் ஊழலை ஒழிக்க முடியும். ஜனவரி மாதத்தில் ஜல்லிக்கட்டு. மே மாதத்தில் கயவர்களோடு மல்லுக்கட்டு என்றார். துன்பப்படும் மக்களைப் பார்த்துவிட்டு இறந்தால், எனக்கு நல்ல சாவு கிடைக்காது எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன், விவசாயம் தோன்றும்போதே மதுவும் தோன்றிவிட்டது என்பதுதான் உலக சரித்திரம்.

மதுவை ஒழிப்பேன் என்று சொன்ன எந்த அரசும் அதை முழுமையாக செய்தது இல்லை. ஆனால், அரசு மதுவை விற்பனை செய்யக் கூடாது.

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் IAS அதிகாரிகளை வைத்து செய்யப்படும் மது விற்பனை தனியாரிடம் ஒப்படைக்கப்படும். ஏனெனில் மதுவை ஒழிப்பதாகக் கூறி கள்ளச்சாராயத்துக்கு நாம் விதைபோட்டுவிடக் கூடாது என்றார்.

மேலும், மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்றிக்காட்ட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கனவு கண்டார். அந்த கனவின் நீட்சிதான் நான்.

எம்.ஜி.ஆர் கனவை நனவாக்காமல் உறங்கிக் கொண்டுள்ள ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் இது. எங்கள் ஆட்சியில் மதுரை இரண்டாம் தலைநகராக மாற்றப்படும்.

நீட் தேர்வு குறித்து கல்வியாளர்களுடன் ஆலோசனை செய்து அறிவிக்கப்படும். இலவசமாகக் குடிநீர் வழங்கப்படும். விவசாயிகள் அங்கீகரிக்கப்படுவார்கள். மாணவர்கள் பொதி சுமக்கும் கழுதைகளாக இருக்க மாட்டார்கள்என்ற ஆறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தார். 

Leave a Reply