Home > அரசியல் > கன்னியாகுமரி மக்களவையில் போட்டியிட கரு நாகராஜன் முயற்சி

கன்னியாகுமரி மக்களவையில் போட்டியிட கரு நாகராஜன் முயற்சி

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் கடந்த ஆகஸ்டு 28 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து குமரி மக்களவைத் தொகுதி காலியானது என்று மக்களவை செயலகம் அறிவித்தது.

இந்நிலையில் குமரி மக்களவைத் தேர்தல், மற்றும் குடியாத்தம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பீகார் சட்டமன்றத் தேர்தலோடு நடக்குமா அல்லது வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலோடு நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதற்கிடையே குமரி மக்களவை இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அக்கட்சி வட்டாரங்களில் இருந்து பதில் கிடைத்துள்ளது.குமரி தேர்தலில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சீட் அளிப்பதில்லை என்று தமிழக பாஜக தலைவர் முடிவு செய்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

அந்த அடிப்படையில் விக்டோரியா கௌரி, நயினார் நாகேந்திரன் ஆகியோரும் இந்த இடைத்தேர்தலில் வாய்ப்பு கேட்கிறார்கள்.

ஆனால் குமரி தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு தருமாறு தற்போதைய மாநிலப் பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் மாநிலத் தலைவர் முருகனிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

கரு. நாகராஜன் இந்து நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். தமிழிசை பாஜக தலைவராக இருக்கும்போது பாஜகவில் சேர்ந்தவர். அந்த வகையில் குமரி தொகுதியில் போட்டியிட நாகராஜன் விரும்புவதை முருகனும் முதல் கட்டமாக ஆமோதித்திருக்கிறார்.

பொன்.ராதாகிருஷ்ணனைத் தவிர்க்க வேண்டும், அதேநேரம் இன்னொரு அறிந்த முகம் கொண்ட நாடார் சமுதாயத்தவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றால் கரு . நாகராஜனுக்குக் கொடுக்கலாம் என்றும் முருகனிடம் சிலர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

முருகன் பாஜக தலைவரானதில் இருந்து கட்சியில் நாகராஜனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதால் இதை அனேகமாக முருகன் ஏற்றுக் கொள்ளக் கூடும்” என்கிறார்கபொன்.

ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்களோ, “எங்க அண்ணாச்சி நின்றால் குமரியில் பாஜக டெபாசிட் வாங்கும். அவ்வளவுதான் இப்போதைக்கு சொல்ல முடியும்” என்று கூறுகிறார்கள்.

You may also like
பாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு
நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய பாஜக பிரமுகர்கள் உள்பட 19 பேர் கைது
சசிகலா வந்தால் அதிமுகவில் மாற்றம் ஏற்படும்
உ.பி போலீஸின் நடவடிக்கை பாஜக பிம்பத்தை குறைத்துள்ளது: உமா பாரதி கருத்து

Leave a Reply