Home > அரசியல் > வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?

வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?

திமுகவை வீழ்த்தியே ஆகவேண்டும் என்று எதிரிகள் பல்வேறு யூகங்களை வகுத்து, சாதிவாரியாக வாக்குகளை சிதைக்க திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களுடைய வியூகங்களை திமுக தலைவர் உணர்கிறாரா என்பது தெரியவே இல்லை. கூடுகிற கூட்டம் அனைத்தும் வாக்குகளாக மாறாது என்பது கலைஞர் காலத்திலிருந்தே திமுகவினரின் அனுபவமாக இருக்கிறது.

எப்படி இருந்தாலும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான மக்கள் மனநிலையை அப்படியே திமுகவுக்கு ஆதரவாக திருப்ப திமுக தலைவருக்கு குறுக்கே இருப்பது என்ன என்பது புரியாத புதிராகவே இரு்ககிறது. குறிப்பாக, இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று அறிவித்த திமுக தலைவர், அதை்ககூட முழுமையாக செயல்படுத்த முடியாமல் தவிக்கிறார் அல்லது பயப்படுகிறார் என்று கட்சிக்காரர்களே பேசும் நிலை உருவாகி இருக்கிறது.

அதிலும் குறிப்பாக, செங்கல்பட்டு – காஞ்சிபுரம் மாவட்டங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மிகவும் பயப்படுகிறார் என்று தொண்டர்கள் சொல்வதை காதில் கேட்க முடிகிறது. செங்கல்பட்டு – காஞ்சிபுரம் மாவட்டங்கள் அரசாங்க அலுவல் ரீதியாக பிரிக்கப்பட்டு 13 மாதங்கள் ஆகிறது. ஆனால் தி.மு.கவில் இன்றுவரை காஞ்சிபுரம் மாவட்டம்- செங்கல்பட்டு மாவட்டம் என பிரிக்கப்படாமல், முறையே காஞ்சிபுரம் வடக்கு மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் என்றுதான் இருக்கிறது.

ஒருவேளை அரசு அறிவித்த இந்த மாவட்ட பிரிவினையை திமுக ஏற்கவில்லை என்றால் அதையாவது பகிரங்கமாக அறிவித்திருக்கலாம். அப்படி இல்லை என்றால், கட்சிரீதியாக ஏன் பழைய நடைமுறையே தொடர்கிறது என்று தொண்டர்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள். ஏனென்றால், கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் மற்ற மாவட்டங்களை போல இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

குறிப்பாக காஞ்சிபுரம்- செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டுமின்றி, எல்லா மாவட்டத்திலும் ஆதிதிராவிடர் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மாவட்ட துணைச் செயலாளர் பொறு்ப்பு ஒதுக்கபட்டுள்ளது. அப்படி பார்த்தால், செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளும் வருகிறது. இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அறிவிப்பை இங்கு நடைமுறைப்படுத்தினால், ஆதிதிராவிடர் சமூகத்திற்கு ஒரு மாவட்டச் செயலாளர் பொறுப்பாவது கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில்தான், தேர்தலுக்கு பிறகுதான் மாவட்டம் பிரிக்கப்படும் என அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தகவலைக் கசியவிட்டனர்.
இதை கேள்விப்பட்டு விரக்தியின் உச்சத்திற்கு சென்ற ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் அழகிரி அணியினருடன் சமூக ரீதியாக கைகோர்த்திருக்கிறார்கள். அதன்விளைவாக, முதல் முறையாக தேர்தல் வர சில மாதங்கள் உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் மேம்பாலத்தில் மு.க.அழகிரி பிறந்தநாளுக்கான சுவர் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது.
அச்சரப்பாக்கம் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் செ.மதிவாணன், மாவட்ட செயலாளரின் சாதிய ரீதியிலான அனுகுமுறை பிடிக்காமலும் தொடர்ந்து தன்னை ஒதுக்கியதாலும் அழகிரியை சந்தித்து அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

முன்னாள் எம்எல்ஏ செ.மதிவாணன் விடுதலை போராளி மக்கள் கட்சி (VPMK) என்ற கட்சியினை சில மாதங்களுக்கு முன் தொடங்கி உள்ளார். மதிவாணன் திருமணம் பிணாயூரில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. மாநாடு போல் கூட்டம் அலைமோதியது.மு.க.அழகிரியின் தாக்கம் செங்கல்பட்டு மாவட்டம் வரையில் வந்துள்ள நிலையில் அழகிரியுடன் விடுதலை போராளி மக்கள் கட்சி தலைவர் மதிவாணன் கைகோர்க்கும் நிலையில் ஆதிதிராவிடர் வாக்குகள் சிதறும் நிலை உருவாகி இரு்ககிறது.


செங்கல்பட்டு- காஞ்சிபுரம் மாவட்டத்தில் வன்னியர் வாக்குகள் பெருமளவில் உள்ளன. அந்த சமூக வாக்குகள் பா.ம.க.வை நோக்கி செல்லும். அதை ஈடுகட்ட திமுக. ஆதிதிராவிடர் வாக்குகளை வைத்து சரிசெய்ய வேண்டிய நிலையில் உள்ளது. முக அழகிரி- விடுதலை போராளி மக்கள் கட்சி சரியளவில் அவ்வாக்குகளை பிரித்தால் சேதாரம் திமுக விற்கு தான் என்பதை திமுக தலைவர் உணரவேண்டும் என்று தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மாவட்டங்கள் பிரிக்கப்படாமல் இருப்பதால் ஏமாற்றத்தில் உள்ள தி.மு.க நிர்வாகிகளும் தொண்டர்களும் மு.க.அழகிரி அணி நோக்கி செல்லவும் வாய்ப்பு உள்ளது. திமுக தலைமை தொண்டனை இழக்க விரும்பாது என நம்புவோம். லட்சக்கணக்கான தொண்டர்களால்தான் இந்த கழகம் நிற்கிறது என பெருமிதத்தோடு தலைவர் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், காஞ்சிபுரம்- செங்கல்பட்டு மாவட்ட தொண்டர்களை கட்சி இழந்துவிடுமோ என்று திமுக நலம் விரும்பிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

You may also like
ஆக்சிஜனில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பிரிவினை அரசியல்!
நல்லா கெளப்புறாய்ங்கடா பீதிய! – ஒரு சாமியாரின் புது சரடு!
உதயநிதி ஸ்டாலின் ஊர் சுற்ற வேண்டும்!
சீமான் அயோக்கியர் என்று சொல்ல பல காரணங்கள் உள்ளன..!

Leave a Reply