Home > அரசியல் > சிறுபான்மை மத மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை- முதல்வர் எடப்பாடி

சிறுபான்மை மத மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை- முதல்வர் எடப்பாடி

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது, இந்த விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், கிறிஸ்துவ அமைப்பினர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாம் எந்த மதத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், நாம் அனைவரும் தமிழா்கள். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருப்பது, தமிழகத்தின் பெருமை எனத் தெரிவித்தார்.

வேறு எந்தக் கட்சியிலும் இல்லாத அளவுக்கு கிறிஸ்தவ சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள், அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் அலங்கரித்துக் கொண்டிருக்கிறாா்கள் எனத் தெரிவித்த முதல்வர், கிறிஸ்தவா்கள் புனித யாத்திரைக்கு அரசின் சாா்பாக வழங்கப்படும் உதவித் தொகையானது ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.37 ஆயிரமாக உயா்த்தப்படும் என்றும் அறிவித்தார்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்த நிலையில், மக்களவைத் தேர்தலில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளடக்கிய சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என அக்கட்சியின் தலைவர்களே வெளிப்படையாக பேசினர்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதல்வர், ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின்படி நாங்கள் நடப்போம். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு.

கொள்கைதான் என்றைக்கும் நிலைத்து நிற்கும். அந்தக் கொள்கையின்படியே கட்சி நடக்கும். அதன்படியே அதிமுக இயங்கிக் கொண்டிருக்கிறது. எந்த சிறுபான்மை மக்களும் அச்சப்படத் தேவையில்லை. அவா்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக இருக்கும்என்று நம்பிக்கையளித்தார

Leave a Reply