Home > அரசியல் > இந்தியாவின் மூத்த மொழிக்கு தொல்லியலில் கூட மரியாதையில்லையா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்

இந்தியாவின் மூத்த மொழிக்கு தொல்லியலில் கூட மரியாதையில்லையா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்

மத்திய அரசின் தொல்லியல் துறை பட்டப்படிப்புக்கான அறிவிப்பில் கல்வி தகுதியாக சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி மொழிகள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் மொழி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின் ”இந்தியாவின் பன்முகத்தன்மையை பாழ்படுத்தி ஒருமைப்பாட்டினை குலைப்பதையே பாஜக அரசு கொள்கையாக கொண்டுள்ளது. தொடர்ந்து தமிழை புறக்கணிக்கும் வேலையை செவ்வனே செய்து வருகிறார்கள். தற்போது தொல்லியல் படிப்புக்கான கல்வி தகுதியில் தமிழ் மொழி இல்லாததும், பட்டய படிப்புக்கான அறிவிக்கையில் தமிழ் இல்லாததும் கண்டனத்திற்கு உரியவை” என கூறியுள்ளார்.

மேலும் “தமிழ் – தமிழர் நலன் புறக்கணிப்பைத் தொடர்ந்து வரும் இந்திய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனத்திற்கு எதிராக அனைவரும் இணைந்து குரல் எழுப்புவோம்!” என்று கூறியுள்ளார்.

You may also like
நீட் தேர்வு குறித்து ஸ்டாலின் அறிக்கை
தாயார் தவுசாயம்மாள் மறைவு : முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்
“வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் தேவை” – மு.க ஸ்டாலின்
அண்ணா பல்கலைக்கழக
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம்..

Leave a Reply