Home > அரசியல் > நரேந்திரமோடி வெளிநாடு செல்லாத 2020

நரேந்திரமோடி வெளிநாடு செல்லாத 2020

பிரதமர் நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி இந்தியாவிலேயே இல்லாமல் அடிக்கடி வெளிநாடு சென்றுவிடுவதாகவும், இதனால் வீண் செலவுகள்தான் ஏற்படுகின்றன என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தனர்.

ஆனால், பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களால் இந்தியாவுக்கு அந்நிய முதலீடுகள் ஏராளமாக வருவதாகவும், தேசப் பாதுகாப்பு தொடர்பான முக்கியப் பிரச்சினைகளில் மற்ற நாடுகளின் ஆதரவுகள் கிடைப்பதாகவும் பாஜகவினர் வாதிடுகின்றனர்.

இந்த நிலையில் பிரதமரான பிறகு மோடி வெளிநாடு பயணம் செய்யாத ஆண்டு 2020 மட்டுமே என்று தெரியவந்துள்ளது. பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பின்படி, கொரோனா காரணமாக இதுவரை பிரதமர் இந்த ஆண்டில் ஒரு பயணம் கூட மேற்கொள்ளவில்லை.

பிரதமர் கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரேசிலுக்கு பயணம் மேற்கொண்டார். கொரோனா தீவிரம் குறைவதால் சமீப காலத்தில் பல மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

பிகார் மாநிலத்திற்கு நான்கு முறை சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டது இதில் குறிப்பிடத்தகுந்தவை.

பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பின்படி, 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2019 நவம்பர் வரை இதுவரை 96 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளார் மோடி.

2014ஆம் ஆண்டு 8 நாடுகளுக்கும், 2015 இல் 23 நாடுகளுக்கு பயணம் சென்றார். அதேபோல 2016 ஆம் ஆண்டு 17 நாடுகள், 2017 இல் 14 நாடுகளுக்கும், 2018ஆம் ஆண்டு 20 நாடுகளுக்கும், 2019 இல் 14 நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் சென்றுள்ளார்.

You may also like
பிரதமர் மோடி பயன்படுத்தும் மொபைல், சிம் கார்டு?
ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் என்கிறாரே மோடி. ஏன்?
மு.க. அழகிரியை பிடிக்கத்தான் அமித்ஷா வர்றாரா?
ஐநா சபை கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறிய இந்தியப் பிரதிநிதி…

Leave a Reply