Home > அரசியல் > தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் நாளை இலங்கை பயணம்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் நாளை இலங்கை பயணம்

இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு இடையே முத்தரப்பு கலந்துரையாடல்களுக்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாளை (நவம்பர் 27) இலங்கைத் தலைநகர் கொழும்பு வருகிறார் என்று, இலங்கை செய்தித்தாள் டெய்லி மிரர் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அஜித் தோவல் இலங்கை சென்ற நிலையில், இந்த வருடம் இரண்டாவது அரசு முறைப் பயணமாக இலங்கை செல்கிறார். கடந்த ஆண்டு அதிபர் கோதபய ராஜபக்‌ஷேவின் தேர்தல் வெற்றியை அடுத்து ஜனவரியில் இலங்கை சென்றார் தோவல்.

நாளை மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமது தீதியும் கொழும்புக்கு பயணம் செய்கிறார்.

இந்தியப் பெருங்கடல் அண்டை நாடுகள் அளவிலான முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தைகள் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்குகின்றன. இதுபோன்ற கடைசி கலந்துரையாடல் 2014 மார்ச்சில் டெல்லியில் நடைபெற்றது.

அஜித் தோவலின் கொழும்புப் பயணத்துக்கு இன்னொரு பின்னணியும் இருக்கிறது. கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் சீனாவின் முக்கியத்தும் வாய்ந்த அதிகாரிகள் குழுவினர் இலங்கைக்கு பயணம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து அக்டோபர் இறுதியில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இலங்கை சென்றார். சீனா, அமெரிக்க குழுவினர் இலங்கை வந்து சென்றிருக்கும் நிலையில் இந்தியாவின் முக்கியமான பொறுப்பில் இருப்பவரான அஜித் தோவல் இலங்கை செல்கிறார். எனவே இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

நவம்பர் 27 ஆம் தேதி இலங்கையில் பல ஆண்டுகளாக போராடி வந்த விடுதலைப் புலிகள் உயிரிழந்த வீரர்களுக்காக கடைபிடித்து வந்த மாவீரர் தினம் என்பது குறிப்பிடத் தக்கது. மாவீரர் தினத்தை தமிழர் பகுதிகளில் இன்னமும் கடும் கட்டுப்பாடுகளோடு மக்கள் நடத்தி வருகிறார்கள்.

You may also like
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
14 மீனவர்கள் கைது
நாகை மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
மீண்டும் பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச
இலங்கையில் கொரோனா தாக்கம் காரணமாக தடைபட்ட நாடாளுமன்ற தேர்தல் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கும்

Leave a Reply