Home > அரசியல் > முதலாளித்துவத்துக்கும் சோசலிசத்துக்கும் சண்டை மூட்டிய கொரோனா வைரஸ்!

முதலாளித்துவத்துக்கும் சோசலிசத்துக்கும் சண்டை மூட்டிய கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏற்பட்டுள்ள  நெருக்கடியின் மறுபுறம், விஷயங்கள் மீண்டும் ஒரே மாதிரி இருக்கப்போவதில்லை.   இது இருபதாம் நூற்றாண்டில் நடந்து முடிந்த இரண்டு உலகப் போர்களுக்குப் பின் ஏற்பட்ட நிலைமைக்கு நிகராக அமையப்போகிறது. இன்றைய பொதுவான நிலைமை ஏற்கெனவே கணித்தபடி மிகச்சரியாக, “மாறிவிட்டது, முற்றிலும் மாறிவிட்டது!” மேலும், இப்போதைய நிலைமையின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, நிகழ்வுகளின் விரைவான வேகமாகும்.   கோர்டன் பிரவுன் தனது புதிய தொழிலாளர் வம்சாவளி எனும் நூலில், நாங்களே எங்களுக்குள் விவாதித்தபடி, லெனினை மேற்கோள் காட்டியுள்ளார். லெனின் சொன்னார்… “ஒரு நெருக்கடியில் பல பத்தாண்டுகளாக நிகழ்ந்த நிகழ்வுகள், சில நேரங்களில் ஒரே வாரத்தில் குவிந்திருப்பது போலத் தோன்றலாம்!”   சில மாதங்களுக்கு முன்புவரை, ‘சோசலிஸ்ட்’ என்று கருதப்பட்ட, ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளை,  முதலாளித்துவமும் அவர்களின் அரசாங்கங்களும் ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.  அவர்களையும் அவர்களுடைய அமைப்பையும் உலகளாவிய பொருளாதார மற்றும் சமூக பேரழிவிலிருந்து காப்பாற்ற முயற்சிக்கும் ஒரு வழியாக தீவிரமாக இப்போது ஏற்றுக்கொண்டன. இதில் மிகமுன்னேறிய தொழில்துறை நாடுகளில் ஏற்பட்டுள்ள தொழிலாளர்களின் எழுச்சியும், நவகாலனித்துவ உலகில் ஏற்பட்டுள்ள மகத்தான கிளர்ச்சிகளும் உள்ளடங்கும்.   பிரிட்டனில் ஒரு முதலாளித்துவ விமர்சகர் ஒருவர் அறிவித்தபடி, டோரி கட்சியைச் சேர்ந்த கருவூல அதிபர் ரிஷி சுனக், “டோரி கோட்பாடுகளுக்கும் உணவுக் கலவரங்களுக்கும் இடையில் எதுவென்று முடிவு செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டார். அவரும் சரியார தேர்வு செய்தார்”. சரி, அந்த தேர்வு என்ன? அதுபற்றி, மற்றொரு டோரிக் கட்சி அமைச்சர் ஒருவர் அப்சர்வர் நாளிதழில் பதிலளித்தார்… “நாங்கள் பொருளாதாரத்தை தேசியமயமாக்கிவிட்டோம்.”   இது முற்றிலும் சரியானது அல்ல. ஆனால், உண்மை என்னவென்றால், டோரிகள் நூற்றுக்கணக்கான கோடிகள்  அரசு பணத்தை – நமது பணத்தை – சமூக தேவைக்காக அல்லாமல், தனியார் லாபத்தின் அடிப்படையிலான தங்கள் அமைப்பை முடுக்கிவிடுவதற்காக பொருளாதாரத்தை தேசியமயமாக்கினர். அவர்களுடைய அமைப்பு வீழ்ச்சியடையும் என்று அச்சுறுத்தப்பட்ட நிலைக்கும், பெரிதும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மத்தியில் வெடித்த வர்க்கக் கோபத்திற்கும் இடையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.   இந்த அமைப்பு தோல்வியடைந்துவிட்டது என்பதை தற்போதைய நெருக்கடி வெளிப்படையாக தெளிவுபடுத்திவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக மிக முக்கியமான தேசிய சுகாதார சேவையில் (என்.எச்.எஸ்.) தோல்வியடைந்து விட்டது. பிரதமர் போரிஸ் ஜான்சனும் அவரது கூட்டாளிகளும் ‘எங்கள் என்.எச்.எஸ்’ என்று புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் என்.எச்.எஸ். எனப்படும் தேசிய சுகாதார சேவையை படிப்படியாக தனியார்மயப்படுத்தி, அட்டையைப் போல அதை உறிஞ்சிவிட்டார்கள். 1945ல் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு தொழிலாளர்கள் இயக்கம் உருவாக்கியது என்.ஹெச்.எஸ். என்பது வரலாறு. போர் முடிந்து வீட்டிற்கு திரும்பி வரும் வீரர்களும் தொழிலாளி வர்க்கமும், ‘மீண்டும் ஒருபோதும்’ இப்படி ஒட்டுமொத்த வேலையின்மைக்கும் பொருளாதார இழப்புக்கும் ஆளாகக்கூடாது என்று பிரகடனம் செய்தார்கள்.   மேலும், என்.ஹெச்.எஸ்.சை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அனூரின் பெவன், டோரி கட்சியிடமிருந்து கடுமையான எதிர்ப்பை சந்தித்தார். அந்த நேரத்தில், பெரும்பாலும் டோரி மருத்துவர்கள்தான் இதை முக்கியமாக எதிர்த்தார்கள். இந்தத் திட்டத்தை செயல்படுத்த, “டாக்டர்களின் வாயில் தங்கத்தைத் திணிப்பதுதான்” தான் ஒரே வழி என்று பெவன் ஒப்புக்கொண்டார். அதாவது, டாக்டர்களை குறிப்பிட்ட அளவு தனியே தொழில் நடத்த அனுமதிப்பதைத்தான் பெவன் அப்படி குறிப்பிட்டார். பின்னர் இது தாட்சர் பிரதமரான சமயத்தில் புரட்சியை எதிர்கொள்வதற்காக இந்த சலுகையை ஒரு ஆப்பாக பயன்படுத்தினார். அதாவது, என்.ஹெச்.எஸ்.ஸின் குறிப்பிடத்தக்க சில பிரிவுகளை தனியார்மயமாக்கினார்.  அதைத்தொடர்ந்து, என்.எச்.எஸ். பலவீனமடைந்தது. தாட்சரின் அழிவுகரமான முயற்சிகளை டோனி பிளேர், கேமரூன் மற்றும் தெரஸா மே ஆகியோரும் தொடர்ந்தனர்.   தற்போதைய நெருக்கடியில் இது வெளிப்படையாக வெளிவந்துள்ளது. அவசர படுக்கைகள், சுவாசக் கருவிகள் மற்றும் பிற முக்கிய, உயிர் காக்கும் கருவிகளின் பற்றாக்குறைக்கு அவர்களுடைய நடவடிக்கைகளே காரணம். சிக்கன நடவடிக்கை, என்.ஹெச்.எஸ்.சில் கடுமையான விளைவை ஏற்படுத்தியது. 2020 மார்ச் 2ல் ஐ.எஸ். வெளியிட்ட அறிக்கையில், 1987-88க்கும் 2018-19க்கும் இடையே, 44 சதவீதம் அளவுக்கு பராமரிப்பு படுக்கைகளின் எண்ணிக்கை குறைந்தது.   ஒரு சுகாதார ஆராய்ச்சியாளர் பைனான்சியல் டைம்ஸிடம் கருத்துத் தெரிவிக்கும்போது, “20 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் மருத்துவமனை சந்தை விரிவடைந்து வருகிறது. அதன் விளைவாக, சுகாதாரத் துறையில் போதுமான அளவு முதலீடு செய்ய வேண்டியதில்லை என்று அரசு சமாதானம் கூறிக்கொள்ள வாய்ப்பு உருவானது” என்றார். என்.எச்.எஸ்.சை நலிவடையச் செய்து, தனியார் மருத்துவமனைகளை அரசு வளர்த்தது. ரியல் எஸ்டேட் தொழிலும் வளர்ச்சியடைந்தது. அதற்கான விலைதான் தற்போது மருத்துவமனை வார்டுகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் என்.எச்.எஸ். ஊழியர்களும், நோயாளிகளும் ஆபத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஆம், அவர்கள் மரண அச்சுறுத்தலையும் சந்திக்கிறார்கள்.  இரக்கமற்ற முதலாளித்துவ தனியார்மயமாக்கல் இங்குதான் அழைத்துச் செல்கிறது.   ­­­­­­­­அமெரிக்காவில் ‘சோசலிச சுகாதாரப் பாதுகாப்பு’  என்று சொல்வதற்குக்கூட, தேசிய சுகாதார சேவை என்ற கட்டமைப்பு இல்லை. இது அமெரிக்க தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்த மிக வறியவர்கள் தனியார் சுகாதார திட்டங்களை பெற முடியாத அளவு ஆபத்தில் சிக்கவைத்துள்ளது. இத்தகைய அக்கிரமத் திட்டத்திற்கு எதிராகவும், அதன் ஆதரவாளர்களான ட்ரம்ப் உள்ளிட்டோருக்கு எதிராகவும் தொடக்கத்தில் கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தது.   தனி உடைமை மற்றும் முதலாளித்துவத்தின் அனைத்து போதாமைகளையும் வெளிப்படுத்தியதுடன், இந்த நெருக்கடியில் அரசு அவசரமாக தலையிடவேண்டிய கேள்வியையும் சந்தித்தது. முதலாளித்துவ அரசு, ​​தோல்வியடைந்த  தொழில்களை தேசியமயமாக்கி மீட்பதை, “சோசலிச சமூகத்தை ஆக்கிரமித்தல்” என்று பிரடெரிக் ஏங்கல்ஸ் விவரிக்கிறார். முதலாளித்துவம் இனி அந்த வேலையைச் செய்ய சக்தி இழந்துவிட்ட முதலாளித்துவத்தைத்தான்,  முதலாளித்துவ அரசாங்கம் தேசியமயமாக்கல் மூலம் மீட்க வேண்டியிருக்கிறது. பெரும்பான்மையான தொழில்களைக் கைப்பற்றுவதை இது கேள்விக்குள்ளாக்குகிறது. இதையடுத்து, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சோசலிச திட்டம் என்ற யோசனை முன்வைக்கப்படுகிறது.   அவநம்பிக்கை ஏற்படுத்தும் பொருளாதார சூழ்நிலையின் தாக்குதல்களால், அமெரிக்காவில் தற்போது மிகவும் அசாதாரணமான விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஏழைகளும், தொழிலாளி வர்க்கமும் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். அமெரிக்க அரசு நிறைவேற்றிய போர்க்கால சட்டம் என்பது மிகச்சிறிய அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது என்ற விஷயம் மையத்திற்கு வந்துள்ளது. இது, டொனால்ட் ட்ரம்பிற்கும், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு ஜனாதிபதி போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுவோருக்கும் இடையில் மிகக் கசப்பான யுத்தத்தை வளர்ப்பதாக பைனான்சியல் டைம்ஸ் விவரிக்கிறது. கொரோனா வைரஸை தடுக்கும் முகக்கவசங்கள், சுவாசக்கருவிகள் போன்ற உபகரணங்களை போதுமான அளவுக்கு வினியோகிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   ஜனநாயகக் கட்சியினரும் சில குடியரசுக் கட்சியினரும் கூட ராணுவ தளவாட உற்பத்திச் சட்டத்தைப் பயன்படுத்த, அரசு தயங்குவதை விமர்சித்தனர். இந்தச் சட்டத்தின்கீழ் நிறுவனங்கள் சில தயாரிப்புகளை கட்டாயமாக தயாரிக்கும்படி செய்யமுடியும். அதன்மூலம் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் சேவையில் அந்த நிறுவனங்களை ஈடுபடுத்த முடியும். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை இந்தச் சட்டத்தின்மூலம் இயங்கும்படி செய்ய டிரம்ப் இப்போது  நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.   நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு வல்லுநர்கள் இந்தச் சட்டத்தை உடனடியாகப் பயன்படுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினர். “தங்களுக்கு வரும் கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்தும் திறனையும், மிக அவசரமான தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆற்றலும்,  பிற நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் திறனும் தனியார் துறைக்கு இல்லை” என்று அவர்கள் எச்சரித்தனர். அவர்களுடன், “N95 முகமூடிகள் மற்றும் வென்டிலேட்டர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும், வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் அது சுத்தமாக வேலைக்கு ஆகவில்லை” என்றும் அமெரிக்க தொழிற்சங்கங்களும், அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்ச் சேர்ந்தவர்களும் தங்கள் குரலை இணைத்துள்ளனர்.   நியூயோர்க் மாநிலத்தின் ஆளுநரான ஆண்ட்ரூ கியூமோவுடன் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களில் முதலிடம் பிடித்துள்ள ஜோ பைடெனும் இதுபோன்ற எச்சரிக்கைகளை விடுத்தபின்னர்தான், அவர்களின் தலையீடு வந்துள்ளது. “அமெரிக்க வர்த்தகத்தின் ஒரு பகுதியை தேசியமயமாக்க விரும்பவில்லை” என்பதால் டிரம்ப் இதை செய்ய மறுத்துவிட்டார். அவர் இப்போது தன்னை “ஒரு போர்க்கால ஜனாதிபதி” என்று அழைத்துக்கொள்கிறார். ஆனால் இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்று  ஏற்கனவே சட்ட புத்தகத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள  நடவடிக்கைகளை பயன்படுத்த மறுக்கிறார்!   கொரோனா வைரஸ் நெருக்கடியின் விளைவுகள் பற்றிய ஐ.எஸ் அறிக்கை மார்ச் 3, 2020ல் வெளியானது. அமெரிக்காவின் மோசமான பொருளாதார நிலைமை குறித்து அதே கருத்தியல் பன்றித் தலைத்தன்மையும் வெளியிடப்பட்டது. அங்கு கடந்த வாரம் மூன்று மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையின்மைக்கால பலன்களுக்காக விண்ணப்பித்துள்ளனர். “நாடு முழுவதும் கொரோனா வைரஸ் முழு அடைப்பு காரணமாக அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சேதம் பற்றிய தேசிய அளவிலான சித்திரம் முதன்முறையாக வெளிவந்துள்ளது.”   முந்தைய வாரம் வேலையின்மை 2,82,000லிருந்து 33 லட்சமாக உயர்ந்திருக்கின்றன. நகரங்கள் மற்றும் மாநில நிர்வாகங்கள் மக்கள் பொதுஇடங்களில் கூடுவதை  கட்டுப்படுத்தவும், சில பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கும்படியும் உத்தரவிட்ட முதல் வாரத்தில் மட்டும், வேலையின்மை அளவு 17 லட்சமாக அதிகரித்தாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.   1967 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அரசாங்கம் ஆவணங்களை வெளியிடத் தொடங்கியது. அப்போதிருந்து,  வேலையின்மை அதிகரிப்புகளில்  இதுதான் மிகப்பெரிய வாராந்திர உயர்வு எனக்கூறப்படுகிறது. தொழிலாளர் நலன் சார்ந்த பொருளாதார நிபுணர் ஒருவர், “இது புரிந்துகொள்ள முடியாத ஒரு எண்ணிக்கை. நாங்கள் ஒன்றரை ஆண்டு வேலை வாய்ப்புகளை துடைத்தெறிந்தோம்… நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இது பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையாகும்” என்கிறார்.   ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸில் பணிபுரியும் பொருளாதார வல்லுநர்கள், வரவிருக்கும் வாரங்களில் பெடரல் ரிசர்வ் தலைவரான ஜெய் பாவெலுடன் 15 மில்லியன் முதல் 20 மில்லியன் வேலை இழப்புகள் ஏற்படும் என்று கணித்துள்ளனர். அமெரிக்கா ஏற்கனவே மந்தநிலையில் இருக்கக்கூடிய நிலையில், நாங்கள் ஒரு தலைமுறையை வரையறுக்கும் தருணத்தில் வாழ்கிறோம்” என்று அல்லையன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் முகமது எல்-ஈரியன் கூறினார்.   இந்த ‘போர்க்கால ஜனாதிபதி’ (வியட்நாம் போரைத் தடுத்தவர்!) இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், அவர் எதிர்பார்த்ததை விட, அதிக எதிர்ப்பை எதிர்கொள்ளக்கூடும். ஒவ்வொரு வீட்டுக் கதவு இடுக்குகள் வழியாக செலுத்தப்பட்ட காசோலைகள் மற்றும் வேலையில்லாதவர்களுக்கான நான்கு மாத பலன்கள் உள்ளிட்ட 2 லட்சங்கோடி டாலர் அளவுக்கு பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளித்துள்ளார்.  அதற்கான தேர்தல் போனஸையும் அவர் நிச்சயமாக  எதிர்பார்த்திருக்கிறார்.   ஜோ பைடனின் அரசியல் பலவீனம் காரணமாக இது  நிகழக்கூடும். குறிப்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு, 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது ஏற்பட்ட 2 கோடியே 20 லட்சம் வேலை இழப்புகளை, இப்போது உலகளவில் கிட்டத்தட்ட 2 கோடியே 50 லட்சம் பேர் வேலை இழந்துள்ள நிலையுடன் ஒப்பிட்டிருக்கிறது. இது மேலும் விரிவடைந்து “விரைவான வேலை இழப்புகள் கண்கூடாகும்” என்றும் எச்சரித்துள்ளது.   ஐரோப்பிய யூனியனின் கூட்டாளிகள் மத்தியிலேயே இப்போது தேசிய விரோதங்கள் இப்போது கூர்மையடைந்துள்ளன. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் “தங்களைத் தாங்களே தேடுவதாக” குற்றம் சாட்டியுள்ளார். தொற்றுநோயை எதிர்கொள்வதற்காக ஐரோப்பிய யூனியன் நாடுகள்,  உபகரணங்களுக்குத் தடை மற்றும் எல்லை கட்டுப்பாடுகளை விதித்ததாக அவர் குற்றம் சாட்டினார். இத்தாலிக்கு மருத்துவப் பொருட்கள் வினியோகம் மற்றும் பிற உறுப்பு நாடுகளுக்கு உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கான தடைகளுக்கு போதுமான பதில் இல்லாமையை அவர் தனித்து குறிப்பிட்டார். “ஐரோப்பாவிற்கு உண்மையில் ‘அனைவரும் ஒன்று’ என்ற உணர்வு தேவைப்பட்டபோது, ​​ஆரம்பத்தில் பலர்  ‘எனக்கு மட்டும்’ என்ற பதிலைக் கொடுத்தனர். ஆரம்பத்தில் மிகப் பலர் தங்கள் குடையைப் பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டனர். ஆனால் சிலர் மட்டும் ஒருங்கிணைக்கப்படாத தங்கள் நடவடிக்கையின் விளைவுகளை சமீபத்தில் உணர்ந்தனர். அதற்கும் அவர் தனித்த உதாரணங்களை கொடுத்தார்… “ஆரம்பத்தில் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்வதை தடைசெய்தது ஜெர்மனி. வெளிநாட்டினரை தனது எல்லைக்குள் அனுமதிக்க முடியாது என்று அறிவித்தவுடன், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளத்துக்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் போலந்து கண்டனத்துக்கு ஆளானது”   அதே நேரத்தில் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவரான கிறிஸ்டின் லகார்ட் கூறினார்: “யூரோ மீதான எங்கள் உறுதிப்பாட்டிற்கு வரம்புகள் இல்லை”. கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ளும்போது, அதிலும் இது ஒரு பேரழிவுகரமான நெருக்கடி எனும்போது,  யூரோவில் புதிய மாற்றங்கள் தவிர்க்க முடியாது என்று சிவில் வார் இனிசியேட்டிவ் (சி.டபிள்யூ.ஐ.) தொடர்ந்து வாதிட்டது. உதாரணமாக ஒரு நிதி நெருக்கடியில் இத்தாலி சிக்கியுள்ளது. அதில் இருந்து எந்த நேரத்திலும் அது பிரிந்து போகக்கூடும்.   கொரோனா வைரஸ் நெருக்கடியின் விளைவுகள் பற்றிய ஐ.எஸ் அறிக்கை 2020 மார்ச் 4 ஆம் தேதி வெளியானது. அதில், ஐரோப்பிய ஒன்றியம் என்பது சுதந்திரமான நாடுகள் தன்னார்வமாக ஐக்கியமான அமைப்பு என்றும், நாடுகளுக்குள் ஏற்படும் பொருளாதார, சமூக நெருக்கடிகள் முற்றும்போது ஏற்படும் அழுத்தம் காரணமாக அவை பிரியக்கூடும். மேலும், அவற்றுக்குள் ஏற்படும் தேசிய விரோதங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடிய அம்சமாக இருக்கும்.   தொற்று நோய் நெருக்கடியின் இந்த தொடக்கக் கட்டத்தில்கூட முதலாளித்துவத்திற்கும் அதன் அரசியல் மற்றும் பொருளாதார வியூகம் வகுப்பவர்களுக்கும், இதிலிருநது எப்படி முன்னோக்கி செல்வது என்பது குறித்து தெளிவான யோசனை இல்லை. அரசியல் மற்றும் சமூகரீதியான திரட்டப்பட்ட ஆபத்தான பிரச்சனைகளுக்கு எளிதான குறுகிய கால தீர்வுகள் இல்லை என்ற மங்கலான உணர்தல் உலக முதலாளித்துவத்திற்கு உள்ளது. பொருளாதார சிக்கலை உடைக்க, தேவைப்பட்டால், எதிர்பாராத நடவடிக்கைகளை எடுக்கவும் அவர்கள் தயாராக உள்ளனர். நேற்று கண்டிக்கப்பட்ட திட்டங்களையே, தற்போதைய பொருளாதார பேரழிவுக்கான குறுகிய கால தீர்வுகளாக மாற்ற தீவிரமாக பரிசீலிக்கப்படுகின்றன.   ‘ஹெலிகாப்டர் பணம்’ அதாவது, பணத்தை இலவசமாகப் பெறுவது என்பது பிரிட்டனில் டோரிக்கட்சி அரசாங்கத்தின் அதிகாரபூர்வ கொள்கை. இன்னும் சில மாதங்களுக்கு முன்பு ஜெர்மி கோர்பின் மற்றும் ஜான் மெக்டோனல் ஆகியோரால் இது பரிந்துரைக்கப்பட்டபோது, ​​அவர்கள் கண்டனத்தை எதிர்கொண்டனர். ஒரு கட்டத்தில் சீர்திருத்தங்களுக்கு பணம் கொடுக்க பணம் காய்க்கும் மரம் இல்லை என்று டோரிகள் அறிவித்தார்கள். இப்போது, ​​ அவர்களின் அமைப்பைக் காப்பாற்றுவதே ஒரு கேள்வியாக எழும்போது, பணம் காய்க்கும் மரங்கள் நிறைந்த வனத்தையே கண்டுபிடிக்கிறார்கள். இப்போது மந்தநிலை மட்டுமல்ல, பொருளாதார மந்தநிலையும் காணப்படுவதால் அவர்கள் பீதியடைந்துள்ளனர், பொருளாதார வீழ்ச்சியைத் தடுப்பதற்கான மிக ‘தீவிர’ நடவடிக்கைகளை அவர்கள் பரிசீலித்து வருகின்றனர். சி.டபிள்யு.ஐ போலவே 2007-08 நெருக்கடியை அனுபவபூர்வமாக எதிர்பார்த்த முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்களில் ஒருவரான நூரியல் ரூபினி போன்ற பொருளாதார சூத்திரதாரிகள், இந்த நெருக்கடி தீவிரமானதாகவும், நீடித்ததாகவும் இருக்கக்கூடும் என்றும் உண்மையில் இது ஒரு பொருளாதார மந்தநிலை என்றும் கணித்துள்ளார்.   இது V வடிவமாக இருக்காது என்று அவர் வாதிடுகிறார் – ஒரு கூர்மையான சரிவு மற்றும் சம கூர்மையான மீட்பு – ஆனால், பெரும்பாலும் ஒரு ‘L’ வடிவம், அல்லது ஒரு ‘I’  வடிவம் கூட எடுக்கும், அதாவது எப்போது, ​​எப்படி என்பதில் உறுதியாக இல்லாமல் ஒரு முழுமையான சரிவு முடிவுக்கு வரும். தொடர்ந்து நீளும் தேக்க நிலையில் இது ஒரு சொட்டு, வேறுவிதமாகக் கூறினால் மந்தநிலை.  கார்டியன் இதழின் பொருளாதார ஆசிரியர் லாரி எலியட், இதுதான் பெரும்பாலும் சாத்தியமான சூழ்நிலை என்று வாதிடுகிறார். 1930 களில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையில் இருந்து இப்போது தொண்ணூறு ஆண்டுகள் ஆகின்றன. ஒரு விமர்சகர் சுட்டிக்காட்டியபடி, வேறுபட்ட ஆழங்கள் மற்றும் தீவிரத்தன்மைக்கு பின்னர் சில பொருளாதார நெருக்கடிகள் இருந்தன, ஆனால், அமெரிக்காவில் 1929 இல் தொடங்கி இப்போது வரை ஒரே ஒரு கடுமையான பொருளாதார மந்தநிலை இதுதான். ஆனால் இது பொருளாதார தேக்கத்தினால் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள அரசியல் விளைவுகளால் ஏற்பட்டது. இந்த இரண்டும் பாசிஸ்டுகளுக்கும் அதீத வலதுசாரிகளுக்கும் அதிகாரத்தை கைப்பற்ற வழங்கப்பட்ட எதிர்மறை வாய்ப்புகள், ஆனால், அவர்களுக்கு முன், ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் மகத்தான புரட்சிகர இயக்கம், ஒரு வெகுஜன இயக்கத்தை வடிவமைப்பதற்காக அதிகாரத்தை கையிலெடுக்க வாய்ப்புகள் உருவாகின.   1930களில் பொருளாதார நெருக்கடி வளர்ந்த வேகத்தால், உழைக்கும் வர்க்கத்தின் பெரிய பிரிவுகள் திகைத்துப் போயின. எதிர்க்கட்சி வெகுஜன இயக்கங்கள் உருவாகி வளர்ந்தன என்றாலும், பொருளாதார மந்தநிலை பல தொழிலாளர்களை போராட்ட பாதையில் விலகிச்செல்லும் வகையில் சோர்வடையச் செய்தன. பொருளாதாரத்தில் ஒரு குறிப்பிட்ட மீட்சி ஏற்பட்டபோதுதான் – குறிப்பாக 1934-36ல் அமெரிக்காவில் – முதலாளிகள் மற்றும் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போரில் தொழிலாளர் இயக்கம் தன்னைத் தானே தூண்டிவிட்டுச் சேர்ந்தது. கொரோனா வைரஸ் நெருக்கடியின் விளைவுகள் குறித்த 2020 மார்ச் 5 ஆம் தேதியிட்ட ஐ.எஸ் அறிக்கையில், அமெரிக்காவில் 1933 முதல் 1936 வரையிலான காலம் டைட்டானிக் தொழில்துறை மற்றும் அரசியல் விழிப்புணர்வு காலமாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிலாளி வர்க்கம், குறிப்பாக எஃகு மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட புதிய தொழில்களிலும், சுரங்கங்களில் பணிபுரிந்த பாரம்பரியமான போராளிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.   அதேநேரத்தில் மரணிக்கும் நிலையில் இருந்த பாரம்பரிய தொழிற்சங்கங்கள் புதிய வாழ்க்கையைப் பெற்றன. ரூஸ்வெல்ட்டின் மறைமுக ஆதரவுடன்,  தொழிற்சங்கத் தலைவர்கள் ‘புதிய ஒப்பந்த’ அடிப்படையில், ஒரு பெரிய ஆள்சேர்ப்புப் பணியில் ஈடுபட்டனர். இதில், பெரும்பாலும் புதிய தொழில்களைச் சேர்ந்த 30 லட்சம் தொழிலாளர்கள்,  தொழிற்சங்கங்களில் இணைந்தனர். அமெரிக்காவின் யுனைடெட் மைன் தொழிலாளர்களின் தலைவரான ஜான் எல் லூயிஸ் மில்லியன் கணக்கான துண்டுப்பிரசுரங்களை தயாரித்தார், அவை சற்றே, “சிக்கனத்துடன் கூடிய உண்மையை” அறிவித்தன: “நீங்கள் ஒரு தொழிற்சங்கத்தில் சேர வேண்டும் என்று உங்கள் ஜனாதிபதி விரும்புகிறார்”. இது தொழிற்சங்கங்களுக்குள் ஒரு பெரிய ஆட்சேர்ப்பு இயக்கத்திற்கு உதவியது. மேலும், அமெரிக்காவில் இருந்த ட்ராட்ஸ்கியிஸ்டுகள் இதில் ஒரு முக்கிய பங்கை வகித்தார்கள். குறிப்பாக ஆட்டோமொபைல் துறையிலும், டீம்ஸ்டர்ஸ் யூனியனிலும், ஃபாரல் டோப்ஸின் ‘டீம்ஸ்டர் கிளர்ச்சி’ தொடங்கி அற்புதமான புத்தகங்களின் வரிசையிலும் அவர்களுடைய பங்கு இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சோசலிஸ்ட் வொர்க்கர்ஸ் பார்ட்டி இந்த கட்டத்தில் ட்ராட்ஸ்கியின் அரசியல் கட்டுப்பாட்டின் கீழ் உறுதியாக இருந்தது.   1930களில் புதிய தொழிற்சங்கங்கள் உருவானதைப் போல, அதே வடிவத்தில், அதே போக்கில் வரலாறு மீண்டும் நிகழ வாய்ப்பில்லை. எவ்வாறாயினும், அமெரிக்காவின் தற்போதைய உத்தியோகபூர்வ தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை மிகக் குறைவு. சில புதிய தொழிற்சங்கங்கள் நிறுவப்பட்டு வளரக்கூடும். ஆனால் ஏற்கனவே இருக்கும் தொழிற்சங்கங்களுக்குள் நடக்கும் யுத்தம், ஒரு புதிய போர்க்குணமிக்க சண்டையிடும் தலைமையை தயாரிக்க முடியும். அந்தத் தலைமை தற்போதுள்ள தொழிற்சங்கங்களை நிரப்பி, புதிய போர்க்குணமிக்க வர்க்கப் போராளிகள் அவற்றை புதுப்பித்து  ஜனநாயகப்படுத்தலாம்.   இது புதிய தொழிற்சங்கங்களுக்கு வழிவகுத்து,  நிகழ்வுகளின் சுத்தியல் வீச்சுகளின் அடிப்படையில் அவை நிரப்பப்படும். சி.டபிள்யு.ஐ.யில் இருந்து சமீபத்தில் பிரிந்தவர்கள் அடையாள அரசியலுக்கு அடிபணிவதன் மூலம் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பில்லை. உண்மையில் அவர்கள் தொழிற்சங்க வேலைகளை கைவிடுவார்கள். அமெரிக்க முதலாளித்துவத்தின் வீச்சுகளால் குளிர்கால தூக்கத்திலிருந்து தூண்டப்படவுள்ள அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் சிறந்த பிரிவுகளுக்கு, பரவலாக உணரப்படாத திறமையற்ற ட்ரம்ப் தலைமையில் ஒரு வழியைக் கண்டுபிடிக்க அவர்களால் இயலாது என்பதை நிரூபிப்பார்கள்.   லாரி எலியட் பெரும்பாலும் பிரிட்டன் தொடர்பாக எழுதியுள்ளார், ஆனால், அவரது பொருளாதார பகுப்பாய்வு மற்ற நாடுகளின், குறிப்பாக அமெரிக்காவின் நிலைமைகளுடன் ஒத்திருக்கிறது. ஒரு விபத்து தவிர்க்க முடியாதது என்று அவர் கூறியுள்ளார்… “இது விளக்குகள் அணைக்கப்பட்டதைப் போன்றது. நாடுகள் பதுங்கியிருப்பதால் உலகப் பொருளாதாரம் இருளில் மூழ்கியுள்ளது… 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இங்கிலாந்து பொருளாதாரம் 15% சுருங்கிவிடும். அது ஒரு மந்தநிலை அல்ல. இது நவீன காலங்களில் மாபெரும் மந்தநிலை உள்பட  எதையும் தாண்டிய சரிவு.” சரிவின் அளவு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அரசாங்கங்கள் எதிர்கொள்ளும் குழப்பம் ஆகியவை ஜெர்மனியால் சுட்டிக்காட்டப்படுகின்றன, இது ஒரு தசாப்த காலமாக நடைமுறையில் உள்ள அதன் நிதிநிலை குறித்த விதிகள் புத்தகத்தை கிழித்தெறிந்துள்ளது. நிதி ஆதாரம் இதற்கு முன்னர் இவ்வளவு தீவிரமாக கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை, ஆனால் இப்போது அது ஜெர்மனியில் கூட ஜன்னலுக்கு வெளியே வந்துவிட்டது.   தொடர்ச்சியான தேசிய பேரழிவுகளால் தத்தளிக்கும் நவகாலனித்துவ உலகின் நிலைமை மிகவும் தீவிரமானதாகவும், அழிவுகரமானதாகவும் இருக்கிறது. நாடு ஒரு “தேசிய பேரழிவில்” இருப்பதாகவும், 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், ஆப்பிரிக்க நகரங்களில் இருந்து வரும் எந்தவொரு “பிரச்சனையையும்” அடக்குவதற்காக ராணுவம் அணிதிரண்டுள்ளது எனவும் தென்னாப்பிரிக்க அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.  சமூக விலகல் மற்றும் அடிக்கடி கைகளை கழுவுதல் என்ற யோசனை முற்றிலும் அவசியமானது மற்றும் பாராட்டத்தக்கது. ஆனால், புதிய காலனித்துவ உலகில் நகரங்களிலும், கிராமங்களிலும் மக்கள் தொகை பெருகும் அடிப்படையில் முற்றிலும் கற்பனையானது என்று, கொரோனா வைரஸ் நெருக்கடியின் விளைவுகள் பற்றிய 2020 மார்ச் 6 தேதி வெளியான ஐ.எஸ் அறிக்கை கூறுகிறது.  உதாரணமாக, நைஜீரியாவின் லாகோஸில், 2 கோடியே 10 லட்சம் மக்கள் ஏற்கனவே விவரிக்க முடியாத நிலையில் நெருக்கடியில் உள்ளனர். வைரஸ் பரவுவதைத் தவிர்க்க அடிக்கடி கைகளைக் கழுவும்படி அனைத்து சுகாதார அதிகாரிகளாலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், ஒருமுறை உங்கள் கைகளை கழுவுவது கூட ஒரு ஆடம்பரமாகும் என்ற நிலையில் அது சாத்தியமில்லை.   எண்ணெய் மற்றும் பிற மூலப்பொருட்களின் வீழ்ச்சியால், அதிகரிக்கும் கடன்கள் மற்றும் பொருட்களின் ஏற்றுமதி பாதிப்புகளால் ஏற்படும் அபாயங்கள் காரணமாக உலகின் ஏழ்மையான நாடுகளில் புதிய கடன் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  பொருட்களின் விலைகள் சரிந்தன: 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தாமிரத்தின் விலை 21% குறைந்துள்ளது, எண்ணெய் 61% குறைந்துள்ளது, காபி 15% குறைந்துள்ளது.   இந்த ஏழை நாடுகள் வைரஸ் அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்கக் கோருகின்றன. தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஆபிரிக்கா எதிர்கொள்ளும் சில சிக்கல்களில், பலவீனமான பொது சுகாதார அமைப்புகள் மற்றும் பொருட்களின் ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் வெளிநாடுகளில் இருந்து  அனுப்பப்படும் பணம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துதல் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த நாடுகளுக்கு கடன் தடை விதிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,   தொற்றுநோயால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த ஏழை நாடுகளின் கடன்கள் ரத்து செய்யப்பட வேண்டும். உலகின் ஏழ்மையான கண்டமான ஆப்பிரிக்காவில் உள்ள 54 நாடுகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புதிய காலனித்துவ உலகில் தோல்வியுற்ற தொழில்களை அரசு கையகப்படுத்துவதற்கான கோரிக்கைகள் வெகுஜன ஆதரவை பெற்றாலும்,  செயல்முறையின் ஆரம்ப நிலையில் நாம் இருக்கிறோம். ஆனால் ஆப்பிரிக்காவிற்கும் பிற ஏழை நாடுகளுக்கும் ஒரு புதிய ‘மார்ஷல் திட்டம்’ வரப்போவதில்லை. ‘தனியார் முதலீட்டாளர்கள்’ – வேறுவிதமாகக் கூறினால் – முதலாளித்துவ அட்டைப்பூச்சிகள் – பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள பேரழிவு வீழ்ச்சியின் மூலம் வளர்ந்து வரும் சந்தைகளில் இருந்து 8 ஆயிரத்து 300 கோடி டாலர்களை நீக்கியுள்ளனர். தொழிற்துறையையும், பொருளாதாரத்தின் தீர்க்கமான பிரிவுகளையும் அரசு கையகப்படுத்துவதற்கு தேசிய அளவில் இப்போது  கோரிக்கைகள் எழுப்பப்பட வேண்டும். இது ஆப்பிரிக்கா முழுவதிலும் ஒரு ஜனநாயக சோசலிச கூட்டமைப்பிற்கான அழைப்புக்கு வழிவகுக்கும்.   பெருமளவில் அரசுக்கு சொந்தமான தொழில்களை கொண்டு உருவாகியுள்ள அல்லது வளர்ந்து வரும் சமூகங்கள், இந்த தொற்றுநோயை ‘சாதாரண’ முதலாளித்துவ நாடுகளை விட மிகவும் திறம்பட கையாண்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. உதாரணமாக, முன்னாள் ஸ்டாலினிச அரசான வியட்நாம் அதன் அண்டை நாடான தாய்லாந்தை விட திறமையாக கையாண்டுள்ளது.   தாய்லாந்து அரசு, அபாயத்தில் சிக்கித் தவிக்கும்  ‘வெளிநாட்டினரை’ கையாள்வதில் அதிக திறமையற்ற முறையில் செயல்பட்டது.   பெரும்பாலும் அப்பாவிகளிடமிருந்தும்,   நிதிவசதி குறைவான இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து மிகைப்படுத்தப்பட்ட கட்டணங்களை மிரட்டி பறித்தனர். இந்தியாவின்   மோடி தலைமையிலான ஆட்சியைப் போன்ற ஆசியாவின் பிற முதலாளித்துவ நாடுகளை விட, தொற்றுநோய் நெருக்கடியிலிருந்து குறைவான உயிர்ப்பலியோடு மிகத்திறமையாக சீனா மீண்டு எழுந்தது. அது, நிச்சயமாக ஒரு விபத்து அல்ல.  எங்கள் வலைத்தளத்திலும், “இன்றைய சோசலிசத்திலும்” நாங்கள் தெரிவித்துள்ளபடி, புதிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற  ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர், இனவாத மோதல்களை மோடி ஆட்சி தூண்டிவிட்டு, அப்பாவி முஸ்லிம்களையும், மற்றவர்களையும் கொலை செய்தது.  ஏறக்குறைய நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில், பரவலாக பணியிடங்களை மூடுவதற்கு மோடி இப்போது தலைமையேற்றுள்ளார். நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களின் சோதனைகள் மற்றும் இன்னல்களை இணைப்பதன் மூலமாகவும், ஏற்கனவே நிலவும் பெரிய அளவிலான அதிருப்தியைத் தூண்டுவதாலும் கடுமையான உணவுப் பற்றாக்குறை மற்றும் கொடூரமான துன்பங்கள் ஏற்படக்கூடும்.   கிராமப்புறங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மிருகத்தனமாக நடத்துவது, வருமானம் அல்லது உணவு இல்லாத கோடிக்கணக்கான மக்களை நகரங்களில் இருந்து வெளியேற்றியது கொடூரமான கலவரங்களையும் அடக்குமுறையையும் தூண்டியது என்று  கொரோனா வைரஸ் நெருக்கடியின் விளைவுகள் குறித்து 2020 மார்ச் 7 ஆம் தேதியிட்ட ஐ.எஸ். அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, இது மிகப்பெரிய மக்கள் இயக்கம். இந்த நெருக்கடியைக் கையாள்வதில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மோடி தனது ஆதரவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுவார். நில உரிமையாளர்கள் மற்றும் முதலாளிகள் ஆதிக்கம் செலுத்தும் அரசுகளின் திறமையற்ற மற்றும் கொடூரமான ஆட்சியை எதிர்த்து, ஒட்டுமொத்தமாக புதிய காலனித்துவ உலகத்தைப் போலவே, கீழேயிருந்து ஒரு பெரிய கிளர்ச்சி இந்தியாவில் உருவாகிறது. மேற்கூறிய பகுப்பாய்வு, வரலாற்றில் மிகவும் சிக்கலான ஒரு காலகட்டத்தில் உலகம் நுழைகிறது என்ற முடிவுக்கு நம்மை இட்டுச் செல்கிறது – உலகம் முழுவதையுமோ, அல்லது ஒரு அளவிற்கோ   தொற்றுநோயால் அழிக்க முடியும் – மகத்தான தீய விளைவுகளுடன். அதே நேரத்தில், இது நாட்டின் உற்பத்தி மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகளில் முதலாளித்துவ தனி உடைமையின் இயலாமை, திறமையின்மை மற்றும் வெளிப்படையான பிற்போக்குத்தன தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டும்.   உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஒழுங்கமைப்பதற்கான சிறந்த வழியாக, ஒரு கட்டுப்பாடற்ற சந்தை தொடர்பான யோசனை ஏற்கனவே ஒரு பெரிய கருத்தியல்ரீதியான அடியை சந்தித்துள்ளது. அடுத்த காலகட்டத்தில் சமூகத்தின் மறுசீரமைப்பு பிரச்சினையை ஜனநாயகக் கட்டுப்பாட்டுடன் சோசலிச வழிகளில் உழைக்கும் வர்க்கமும் அதன் அமைப்புகளும் கையில் எடுக்கும் அத்துடன்,  பொருளாதாரத்தின் அனைத்து மட்டத்தையும் நிர்வகிக்கும். அதே நேரத்தில் நவகாலனித்துவ உலகில் கடுமையாக ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட நாடுகள் மற்றும் கண்டங்கள், மேம்பட்ட (தொழில்மயமாக்கப்பட்ட) நாடுகள் மற்றும் மாகாணங்களில் உழைக்கும் வர்க்கத்தின் சுதந்திரமான இயக்கம் மற்றும் ஒரு வர்க்கப் போராட்டத் திட்டத்தை உலகின் அனைத்து பிரிவுகளிலும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் கையில் எடுப்பார்கள். சமீபகாலம் வரை பிரேசிலில் போல்சனாரோ, அமெரிக்காவில் ட்ரம்ப், இந்தியாவில் மோடி போன்றவர்கள்  பிற்போக்குத்தனமான சர்வாதிகாரிகளின் தொனியை அமைப்பதாகத் தோன்றுகிறது. வைரஸால் பாதிக்கப்பட்டால் “எதையும் உணரமாட்டேன்” என்றும், “உயிர்களைக் காப்பாற்றுவதற்கான அவநம்பிக்கையான முயற்சியில் தனது நாட்டின் இரண்டு பெரிய நகரங்கள் பணிநிறுத்தம் செய்தது, நோயை பெரிய அளவிலான தனிமைப்படுத்தல்களுடன் கட்டுப்படுத்தும் முயற்சி” என்றும் பெருமை பேசுவதில் ட்ரம்ப்பை எதிரொலித்தார் போல்சனாரோ. [கார்டியன்]. பீதி மற்றும் அலறலைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று தனது ஐந்து நிமிட உரையில் பிரேசில் மக்களுக்கு கூறினார். மேலும் சில மாநிலங்களில் அமல்படுத்தியுள்ள ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்தார். இது எதிர்ப்பையும் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டங்களையும் தூண்டியது. ஆர்ப்பாட்டத்தில் இந்த முழக்கமும் இடம்பெற்றது: “எங்களுக்கு ஜனாதிபதி இல்லை – தான் என்ன செய்கிறோம் என்று தெரியாத ஒரு கோமாளி இருக்கிறார்”! டிரம்பின் எதிரொலி! பிரேசில் ஜனாதிபதியின் இந்த போக்கு, அந்த நாட்டில் மிகப் பின்தங்கிய, நகரமான ஃபாவேலாவைச் சேர்ந்த குழுக்கள்கூட வாட்ஸ்அப்பில் சென்று, அதிக மக்கள் தொகை கொண்ட சேரிகளில் வசிப்பவர்களை “வீட்டிலேயே இருங்கள்” என்று வற்புறுத்துவதன் மூலம் நிலைமையை தங்கள் கைகளில் எடுக்க முற்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் தங்கள் சொந்த வழியில் மக்களைப் பாதுகாக்க முயன்றனர். ஜனாதிபதி போல்சனாரோ செய்ய மறுத்து, தொற்றுநோயை வெறும் “மோப்பம்” என்று விவரித்தார். ஜனாதிபதியின் நம்பமுடியாத புறக்கணிப்பை ஃபைனான்சியல் டைம்ஸ்  விவரிக்கிறது. இது ஏழைகள் தன்னிச்சையாக தங்களைக் காத்துக்கொள்ள மேற்கொள்ளும் தலையீட்டைக் காட்டுகிறது. சாவோ பவ்லோ நகர மக்களின் நிலை வேறு மாதிரி இருக்கிறது. அங்கு “பெரும்பாலான மக்கள் சுயதொழில் செய்பவர்கள், பணம் அல்லது உணவு இல்லாமல், நாளை எப்படி இருக்கும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்.” ஏற்கனவே, போல்சனாரோவின் நிலைப்பாடு பெரிய எதிர்ப்புக்களைத் தூண்டுகிறது. அவருக்கும் அவரது அரசாங்கத்திற்கும் எதிரான கிளர்ச்சியைத் மேலும் தூண்டும். பிரேசிலின் வரலாற்றைப் பொறுத்தவரை, சரியான நேரத்தில் வெடிக்கத் தயாராக இருக்கும் பிரஷர் குக்கரைப் போல நிலைமை இருக்கிறது. விரைவில், இங்கேயும் லத்தீன் அமெரிக்காவின் பிற பகுதிகளிலும் வெகுஜன எழுச்சிகளை  எதிர்பார்க்கலாம். நாங்கள் ஏற்கெனவே அறிவித்தபடி, சிலி ஒரு உதாரணம். கொரோனா வைரஸ் நெருக்கடியின் விளைவுகள் பற்றிய 2020 மார்ச் 8 ஆம் தேதியிட்ட ஐ.எஸ் அறிக்கை. இந்த கோமாளிகள் மற்றும் சர்வாதிகாரிகள் ஏற்கனவே அரசியல் ரீதியாக அம்பலமாக உள்ளனர். அவர்களால், தொற்றுநோயைப் புரிந்து கொள்ளவோ அல்லது மக்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கவோ இயலாது. அரசியல் ரீதியாக அவை மேம்படுவதற்கு முன்பு, பொருளாதார ரீதியாக விஷயங்கள் மோசமடையக்கூடும். உலகை மாற்றுவதற்கான ஒரு இயக்கத்தில், ஜனநாயக மற்றும் தொழிலாள வர்க்க அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட – வெகுஜன இயக்கங்கள், சோசலிசத்தின் உண்மையான கோட்பாடுகளை கண்டுபிடிக்க மீண்டும் ஒருமுறை உலகெங்கிலும் தொடங்கும்.  

Leave a Reply