Home > அரசியல் > திமுகவில் பெண்களுக்கு 75 இடங்கள் ஒதுக்கீடு? #one third reservation

திமுகவில் பெண்களுக்கு 75 இடங்கள் ஒதுக்கீடு? #one third reservation

இந்திய வரலாற்றில் முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் கட்சியாக திமுக இரு்ககப் போகிறது என்கிறார்கள்.

ஏன் போனமுறை எம்.பி.தேர்தலில் சீமான் கட்சிகூட பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்ததே என்று கேட்கலாம். ஆனால், ஆட்சிக்க வரத் தகுதியில்லாத யார் வேண்டுமானாலும் 100 சதவீத இட ஒதுக்கீடுகூட வழங்கலாம்.

ஆட்சிக்கு வரத் தகுதி வாய்ந்த கட்சி முதன்முதலில் உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்த கட்சியாக திமுக இருந்தது. இப்போ அது 50 சதவீதமாக மாறியிருக்கிறது என்பது வேறு விஷயம்.

33 கொடுத்ததால்தானே 50 சதவீதம் ஆகியது. தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் பெண்களுக்கே கொடுத்த கட்சி திமுக. பெண்களுக்கு ஆண்களுக்கு நிகராக வேலை வாய்ப்பில் மட்டுமல்லாமல் சொத்திலும் சமபங்கு கொடுக்க வகைசெய்த கட்சி திமுக.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடுக்காக மற்ற எல்லா கட்சிகளையும் விட திமுக மிகவும் அக்கறையோடு குரல் எழுப்பும் கட்சி. அந்த வகையில் இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. குறைந்தபட்சம் மாவட்டத்துக்கு 2 இரண்டு தொகுதிகளாவது பெண்களுக்கு ஒதுக்கப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது நிஜமானால், இந்திய அளவில் இது முன்னோடியாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

You may also like
புதுச்சேரி முதல்வர் வேட்பாளராகும் ஜெகத்ரட்சகன் பதறும் காங்கிரஸ்!
முஸ்லிம் லீக் கேட்ட 16 க்கு மு.க.ஸ்டாலின் பதில் என்ன?
கலைஞர் தீட்டிய இரண்டு கூராயுதங்கள் – M.K.STALIN – KANIMOZHI KARUNANITHI

Leave a Reply