Home > அரசியல் > அதிமுக – பாஜக வெற்றிக் கூட்டணி தொடரும்

அதிமுக – பாஜக வெற்றிக் கூட்டணி தொடரும்

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என தெரிவித்தார்.

அரசு முறை பயணமாக சென்னை வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது, கலைவாணர் அரங்கில் தமிழக அரசு நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.

ரூ.67,378 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளையும் அமித்ஷா காணொளி வாயிலாக தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள், பாஜக பிரமுகர்கள், அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், அமித்ஷா ஒரு மாபெரும் தலைவர் என புகழாரம் சூட்டினார்.

அதிமுக – பாஜக இடையேயான வெற்றிக் கூட்டணி தொடரும் என்றும் 2021 சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து 3ஆவது முறையாக வெற்றிக் கனியை பறிப்போம் என்றும் இனி வரும் தேர்தல்களிலும் கூட்டணி தொடரும் என்றும் ஓபிஎஸ் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

You may also like
நவம்பர் மாதத்திற்கு ஊரடங்கு முடிய உள்ள நிலையில் நாளை முதல்வர் ஆலோசனை
எடப்பாடிக்கு இருக்கும் துணிச்சல் ஸ்டாலினுக்கு இல்லையா? திமுகவுக்குள் பரவும் அதிருப்தி!
“7 பேர் விடுதலையில், ஆளுநர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – முதல்வர்
நவம்பர் 10, 11 தேதிகளில் முதல்வர் சுற்றுப் பயணம்

Leave a Reply