Home > அரசியல் > தயாநிதிமாறன் மன்னிப்பு கேட்க வேண்டுமாம் – பாமக எச்சரிக்கை நோட்டீஸ்

தயாநிதிமாறன் மன்னிப்பு கேட்க வேண்டுமாம் – பாமக எச்சரிக்கை நோட்டீஸ்

தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாமக சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் பொதுமக்களை சந்திக்கும் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கலந்துகொண்டு பேசிவந்தார்.

அங்கு பேசிய தயாநிதி மாறன், செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்ற கேள்விக்கு,

“அத பத்தி எனக்கு தெரியாதுங்க, அவங்க யார்கிட்ட பேரம் பேசுராங்கன்னு தெரியலை யார் அதிகம் காசு தராங்களோ அவங்களோட போவாங்க ஏன்னா போன முறை 400 கோடி வாங்கினதாக சொல்றாங்க. இந்த முறை 1000 கோடி கேட்கறதா சொல்லறாங்க” என்று தெரிவித்திருந்தார்.

திமுக அதுக்கு தயாரா இருக்குதா என்று கேட்க, எங்க கிட்ட அவ்ளோ காசு இல்லைங்க, கொள்கை மட்டும்தான் இருக்கு என்று பதில் சொன்னார். அதன்பின் பூசாரிப்பட்டி நோக்கி தயாநிதிமாறன் செல்லும் பொழுது அங்கு நூற்றுக்கு மேற்பட்ட பாமகவினர் கட்சி பற்றி அவதூறாக பேசியதாகக் கூறி கறுப்பு கொடி காட்டினர். அத்துடன் தயாநிதி மாறன் கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு உண்டானது.

இதனையடுத்து, காவல் துறை, திமுகவினரின் பாதுகாப்புடன் ரயில் நிலையத்துக்குச் சென்ற தயாநிதி மாறன் அங்கிருந்து சென்னை சென்றார்.இந்த நிலையில் ராமதாஸ் குறித்து அவதூறாக பேசியதற்கு 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என தயாநிதி மாறனுக்கு ஜி.கே. மணி சார்பில் வழக்கறிஞர் பாலு நோட்டீஸ் அனுப்பினார்.

அதில், “பாமக பற்றியும் அதன் நிறுவனர் ராமதாஸ் குறித்தும் அவதூறு பரப்பும் நோக்குடன் பொய்யான செய்திகளை உள்நோக்கத்துடன் வெளியிட்ட திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் அதற்காக 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; அவ்வாறு கேட்காவிட்டால் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்படும்” என்று பாமக தலைவர் ஜி.கே.மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You may also like
புதுச்சேரி முதல்வர் வேட்பாளராகும் ஜெகத்ரட்சகன் பதறும் காங்கிரஸ்!
முஸ்லிம் லீக் கேட்ட 16 க்கு மு.க.ஸ்டாலின் பதில் என்ன?
இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் மீண்டும் சந்தானம்

Leave a Reply