Home > அரசியல் > அய்யா சமூக வலைத்தள போராளிகளே….

அய்யா சமூக வலைத்தள போராளிகளே….

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கண்ணில் நீர் ததும்ப பேசினார் என்று நியூஸ் செவனில் ஊதுகிறார்கள்…

ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் என்றும், கவுரவமான இடங்கள் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் மேலிட தலைவர் வீரப்ப மொய்லி கூறுகிறார்…

மார்க்சிஸ்ட்டுகள் கமல்ஹாஸனின் மக்கள் நீதி மய்யத்துடன் பேசப்போகிறார்கள் என்று ஒரு செய்தியை பரப்புகிறார்கள்…

உடனே சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அதை மறுக்கிறார்…

மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று வைகோவிடம் வாயைப் புடுங்குகிறார்கள்… அதற்கு வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக கூறுகிறார்…

பொதுவாகவே, எல்லா அரசியல் கட்சிகளிலும் திமுகவை பிடிக்காதவர்களும், அதிமுகவை பிடிக்காதவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

தேர்தல் சமயத்தில் திமுகவுடன் பேசுவதற்காக ஒரு குழுவையும் அதிமுகவுடன் பேசுவதற்காக ஒரு குழுவையும் கட்சிகள் வைத்திருக்கும். கலைஞருக்கு நெருக்கமானவர்கள் சிலரும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான சிலரும் இருப்பார்கள்.

தொண்டர்களிலும் திமுகவை பிடிக்காமல் விசிகவில் இணைந்தவர்கள், மதிமுகவில் இணைந்தவர்கள் என்றெல்லாம் இருக்கத்தான் செய்வார்கள்.

தேர்தல் என்று வரும்போது, அந்தந்த கட்சிகளின் கோட்பாடுகள் அடிப்படையில்தான் தலைவர்கள் சில முடிவுகளை எடுப்பார்கள். கூட்டணியின் தலைவராக எந்தக் கட்சியை ஏற்றிருக்கிறோமோ அந்தக் கட்சிக்கும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும்.

அதையெல்லாம் அனுசரித்தே தலைவர்கள் முடிவெடுப்பார்கள். ஆனால், தலைவர்களுக்கு முந்தி, அவர்களுக்கே யோசனை சொல்வதும், கூட்டணியின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் வார்த்தைகளை கொட்டுவதும் முகநூலில் சாத்தியம். களத்தில் அது தவறாகவே முடியும். கூட்டணி இறுதியாகிவிட்டால், அந்த வார்த்தைகள் ஒருத்தரை ஒருத்தர் காயப்படுத்தி, வேலையில் சுணக்கத்தை ஏற்படுத்தும்.

ஆக, சமூகவலைத்தள போராளிகள் வாயை பொத்திக்கிட்டு தலைவர்களுக்கே அறிவுரை வழங்குவதை நிறுத்தினால் நல்லது..

You may also like
பாஜக – அதிமுக கூட்டணியை தோற்கடித்தே தீருவோம் – வீரப்பமொய்லி உறுதி
சில கட்சிகளுக்கு கல்லறை கட்டப்போகும் தேர்தல்!
எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா? – இன்றைய இளைஞர்களுக்கான விளக்கம்!
போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக ஆர்ப்பாட்டம்

Leave a Reply