Home > அரசியல் > இளிச்சவாய் ரஜினி ரசிகரின் மனம்திறந்த கடிதம்

இளிச்சவாய் ரஜினி ரசிகரின் மனம்திறந்த கடிதம்

நடிகர் ரஜினி,இவ்வளவு நாட்களும் உங்களை நிறைந்த மனதுடன் “தலைவா தலைவா” என அழைத்து வந்தோம்..ஏனோ நேற்று முதல் 3.12.2020 முதல், உன்னை “தலைவா” என அழைக்க நா கூசுகிறது.

30 வருடமாக ரசிகர் மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நாயாக உழைத்தோம்.

நீ கோடி கணக்கில் (கருப்பு பாதி) சம்பளம் வாங்குவதற்கு நாங்கள் ஆயிரக்கணக்கில் செலவழித்து முதல் நாளே உன் படத்தை பார்த்தோம்.உன் கட்வுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தோம். (இப்போது நினைத்தால் கூசுகிறது)அரசியலுக்கு வருவாய், ரசிகர் மன்றத்திற்கு ஒரு கவுரவத்தை கொடுப்பாய் என 30 வருடமாக காத்திருந்தோம்.

இப்போதல்லவா தெரிகிறது, நீ எங்களையெல்லாம் — ‘இலவுகாத்த கிளியாக’ ஆக்கிவிட்டாய் என தெரிகிறது..ஆண்டுக்கணக்கில், உன்னையே தலைவனாக, வழிகாட்டியாக போற்றி வந்த ரசிகர் மன்றத்தில் ஒருவர் கூடவா உன் கண்ணுக்கு தெரியவில்லை?மன்றத்திலோ, கலந்துரையாடல்களிலோ, நாங்கள் யாருமே அறிந்திராத, முன்பின் பார்த்திராத, முகம் தெரியாத எவனோ ஒருவனை, திடீரென கொண்டுவந்து முன்னிறுத்தி, இவர்தான் ஒருங்கிணைப்பாளர் என அறிமுகப்படுத்தியபோது நாங்கள் எல்லோரும் கூனி குறுகிவிட்டோம்.

யார் இந்த அர்ஜுன மூர்த்தி.?நமது மன்றத்திற்கும் இந்த ஆளுக்கும் என்ன தொடர்பு?இதற்குமுன் ஒருமுறை கூட இந்த ஆளை நீங்கள் அறிமுகப்படுத்தியதில்லையே?நாங்களும் பார்த்ததில்லையே!திடீரென எப்படி நம் மன்றத்தில் மூக்கை நுழைத்தார்? அதுவும் எடுத்த எடுப்பிலேயே முக்கிய பதவி..

அவர், ஒருங்கிணைப்பாளர் எனில், உங்களுக்கு என்ன வேலை?உங்களுக்கு என்ன நிர்பந்தம்?யார் கொடுத்த அச்சுறுத்தல்?நேற்றுவரை BJP முக்கிய பொறுப்பில் இருந்தவர். அவரை BJPயில் இருந்து விடுவிக்கிறார்களாம்..(கவனிக்க, விடுவித்தார்கள்..நீக்கவில்லை.)

மாறுதலில் வந்தவர்போல் இங்கே வந்து பதவி பிரமாணமாம்.என்ன ஏமாற்று வேலை.?எங்களையெல்லாம் முட்டாள்களாக்கி, கூமுட்டைகளாக்கி, RSSகாரனிடம் அடிமையாக்குவதற்காகவா நாங்கள் உன் பின்னால் இவ்வளவு ஆண்டுகளாக வந்தோம்? பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்து விட்டீர்கள்.

நாட்டை மத ரீதியாக பிளவு படுத்தும் நாசகாரர்களுக்கு பல்லக்கு தூக்கும் ஈனச்செயல் புரிய நாங்கள் தயாரில்லை. இனி உங்களை எதிர்த்து நிற்க தயாராகிவிட்டோம்.

வளைத்து வளைத்து வூடு கட்டி அடிக்கப்போகிறோம். நீ தமிழனால் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டு, வட இந்தியனை தூக்கிபிடிக்க முடிவு செய்து விட்டாய்.

நீ இனி தமிழின துரோகி…உன்னையும் உன் புது கூட்டாளிகளையும், ஓட ஓட விரட்டுதுதான் எங்கள் முக்கியமான கடமை. பிராயச்சித்தம்..

இங்ஙனம்

விழித்துக்கொண்ட இளித்தவாய் ரசிகர்கள்.

You may also like
அரசியலுக்கு வருவேனா, இல்லையா என்பது பற்றி ஆலோசிக்க உள்ளேன் – நடிகர் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் 15 நாட்கள் சென்னையில் தனிமைப்படுத்தி கொள்ள திட்டம்
வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?
ரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!!!

Leave a Reply