Home > அரசியல் > பாலிமர் செய்தியின் சிண்டு முடிதலுக்கு திமுகவினர் பதிலடி!

பாலிமர் செய்தியின் சிண்டு முடிதலுக்கு திமுகவினர் பதிலடி!

பெரம்பலூரில் ஆ.ராசா தலைமையில் வேளாண் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது குடிபோதையில் கத்திய ஒருவரை தூக்கி வெளியே வீசும்படி ஆ.ராசா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாக பாலிமர் நியூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
இதற்கு திமுகவினர் பதிலடி கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கூறியதாவது…
வேளாண் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா சீரியஸாகப் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு குடிகாரன் ஆ.ராசா வாழ்க என்று கத்துகிறான்…
பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்திய அவனை “அந்த நாயை தூக்கி வெளியே போடுங்க” என்று ராசா கூறுகிறார்…
இதை பாலிமர் செய்திக்காரன் ஒளிபரப்புகிறான். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதாக பிட்டு போடுகிறான்…
திமுக கூட்டங்களில் தலைவர்கள் பேசும்போது நல்ல பாய்ண்ட் வரும்போது கைதட்டுவார்கள்… விசில்கூட அடிக்க மாட்டார்கள்… அப்படி இருக்கும்போது ஆ.ராசா விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனை குறித்து பேசும்போது தேவையில்லாமல் போதையில் ஆ.ராசா வாழ்க என்று கத்தினால் கோபம் வரத்தான் செய்யும்.
இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுவதை விட்டுவிட்டு சேகர் ரெட்டி வழக்கை சிபிஐ கைவிட்டதற்கு என்ன காரணம் என்று விசாரித்து செய்தி போட்டால் நல்லது என்று திமுகவினர் கூறுகிறார்கள்.
You may also like
அதிமுக வின் 49-வது ஆண்டு தொடக்க விழா
அதிமுகவின் 49ஆம் ஆண்டு தொடக்க விழா
எம்எல்ஏ தங்கம் தென்னரசு மற்றும் தற்போதைய எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தாயாருமான ராஜாமணி அம்மாள் நேற்று காலமானார்.
ஜிஎஸ்டி இழப்பீடு செய்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – முக ஸ்டாலின்
குடும்ப அரசியலை எதிர்த்து அதிலேயே ஐக்கியமான திமுக

Leave a Reply