Home > அரசியல் > ரகசியமாக நடைபெற்ற ரஜினி ரசிகர்மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ரகசியமாக நடைபெற்ற ரஜினி ரசிகர்மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

நடிகர் ரஜினிகாந்த் அனல் பறக்கும் தமிழக அரசியல் களத்திலிருந்து விலகி தான் நாயகனாக நடிக்கும் அண்ணாத்த படத்தின் பணிகளுக்காக ஹைதராபாத் சென்றுவிட்டார் அது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது

அதேவேளையில் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி
கடந்த சில நாட்களாக சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் ரகசியமாக நடத்தப்பட்டு வருகிறது.

ஒரே நாளில் அனைத்து மாவட்டசெயலாளர்களையும் அழைத்து கூட்டம் நடத்தினால் 

தேவையற்ற பரபரப்பு ஏற்படும் அதனால்கடந்த மூன்று நாட்களாக குறிப்பிட்ட பகுதி மாவட்டச் செயலாளர்கள் ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

டிசம்பர் 15 ஆம் தேதியன்று 14 மாவட்டச் செயலாளர்கள் அழைக்கப்பட்டனர். டிசம்பர் 16ஆம் தேதி சில மாசெக்கள் அழைக்கப்பட்டனர்.

இன்று (டிசம்பர் 17) கூட நான்கைந்து மாவட்டச் செயலாளர்கள் ராகவேந்திரா மண்டபத்துக்கு சென்றிருக்கிறார்கள்.

ரஜினியால் அறிவிக்கப்பட்ட  ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன், மாநில நிர்வாகி சுதாகர் ஆகியோர் மாசெக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டச் செயலாளரிடமும், ‘ஏற்கனவே அமைக்கப்பட்ட பூத் கமிட்டி என்னாயிற்று? இப்போது அதே பூத் கமிட்டி உறுப்பினர்கள் நம்மோடு இருக்கிறார்களா? பணியாற்றுகிறார்களா?” என்று கேட்கப்பட்டிருக்கிறது

ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 25 பேர் கட்டாயம் இருக்க வேண்டுமென்று 2017 ஆம் ஆண்டு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், இப்போது பூத் கமிட்டிக்கு குறைந்தபட்சம் 15 உறுப்பினர்கள் இருந்தாலும் போதும்.

ஆனால் அவர்கள் உறுதியானவர்களாக நம்மோடு எப்போதும் பயணிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளளர்களிடம் கூறியுள்ளார்கள்.

உடனடியாக 15 பேர் கொண்ட பூத் கமிட்டி விவரங்களை தலைமை மன்றத்துக்கு அனுப்ப வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்கள்.

இதைத் தவிரஅவரவர் மாவட்டத்துக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான மக்கள் மன்ற வேட்பாளர்களைக் கண்டறியுமாறும் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் மன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் செல்வாக்கு மிக்கவர்கள் யார் யார் என்ற பட்டியலையும் தயார் செய்யுமாறு கூறியிருக்கிறார்கள்.

பகுதி பகுதியாக நடக்கும் இந்த மாசெக்கள் கூட்டம் மூலம் ரஜினி மக்கள் மன்றம் தேர்தலுக்குத் தயாராகிவிட்டது தெரிகிறது.

Leave a Reply