Home > அரசியல் > சீமான் எந்த கட்சியின் பினாமி -அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

சீமான் எந்த கட்சியின் பினாமி -அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

எம்.ஜி.ஆர் எப்போது நல்லாட்சியைத் தந்தார் என சீமான் விமர்சித்ததற்கு அதிமுக பதில் கூறியுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தான் எம்.ஜி.ஆரின் வாரிசு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

அதேபோல எம்.ஜி.ஆர் தந்த நல்லாட்சியைத் தருவேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எம்.ஜி.ஆரைச் சொல்லி பிரச்சாரம் செய்தால் அது அதிமுகவுக்குத்தான் வாக்காகச் சேரும் என்றார்.

அத்துடன், பிரபாகரனை ஆதரித்ததாலும், ஈழ விடுதலைக்கு ஆதரவு தெரிவித்ததாலும் எம்.ஜி.ஆர் மீது மரியாதை இருக்கிறது.

மற்றபடி அவர் என்ன சிறந்த ஆட்சியைக் கொடுத்தார் என்று கேள்வி எழுப்பிய சீமான், “தமிழ் வழிக்கல்வியை ஆங்கில வழிக்கல்வியாக மாற்றியது எம்.ஜி.ஆர். கல்வி, மருத்துவத்தைத் தனியாருக்கு தாரைவார்த்ததும் அவர்தான்” என்றும் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆரின் புகழை யாராலும் அழிக்க முடியாது.

எம்.ஜி.ஆர் என்ன செய்தார் என்பது குறித்து சீமானுக்குத் தேவைப்பட்டால் புத்தகமாகவே வழங்குகிறேன். உண்மை தெரியாமல் திசைதிருப்பும் வகையில் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாது. எம்.ஜி.ஆர் மீது புழுதிவாரி தூற்ற நினைத்தால் அது உங்களுக்கே கேடாக முடியும் என சீமானுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

சீமான் யாருக்கு P டீமாக வேலை செய்கிறார் எனக் கேள்வி எழுப்பிய அவர், சீமானுக்கு அதிமுக மீது என்ன கோபம் என்று தெரியவில்லை.

ஒருவேளை அவரது கட்சியைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் எங்களது கட்சியில் இணைந்துவிட்டார் என்ற கோபத்தில் அப்படி பேசுகிறாரா என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது எனக் கூறினார்.

You may also like
தேசத்தை நேசிக்கும் தலைவனுக்கு வயது நூறு!
மோடியின் புல்லட் புரூஃப் காரை தளபதி ஏற்கக் கூடாது! – Athanurchozhan
புதிய சட்டமன்றக் கட்டடத்தில் இருந்து மருத்துவமனையை மாற்றியே தீரவேண்டும்! – LR JAGADHEESAN
தலைமைச் செயலாளர் இறையன்புவின் தலைமைப் பண்பு – கிள்ளை ரவீந்திரன்!

Leave a Reply