Home > அரசியல் > சீர்காழி தொகுதியில் வெற்றி யாருக்கு?

சீர்காழி தொகுதியில் வெற்றி யாருக்கு?

சீர்காழி தொகுதியின் முக்கிய தொழில்கள் விவசாயம் மற்றும் மீன்பிடித்தல். பாய் மற்றும் பிரம்பு கைத்தொழில்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மீன்பிடித்தொழிலை நம்பி 80 ஆயிரம் பேருக்கு மேல் இருக்கிறார்கள். 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட பைபர் படகுகளிலும், ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைப்படகுகளும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளன.

ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் பரந்து கிடக்கிறது. சீர்காழி தொகுதி வாக்காளர்களில் ஆதிதிராவிடர் சமூகமே பெரும்பான்மையாக இருக்கிறது. அதனால்தானோ என்னவோ, இந்த தொகுதி உருவான நாளில் இருந்து தனித்தொகுதியாகவே நீடிக்கிறது.

ஆதிதிராவிடருக்கு அடுத்தபடியாக வன்னியர் இருக்கின்றனர். முக்குலத்தோர், மீனவர், நாடார், செட்டியார், பிள்ளை, முதலியார், யாதவர் என்று அனைத்து சாதியினரும் பரவலாக வாழ்கின்றனர். தொகுதியின் வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 43 ஆயிரத்து 851. ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

இந்தத்தொகுதியில் இதுவரை திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களே மாறிமாறி வெற்றிபெற்றுள்ளனர். 2016 சட்டமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட அ.தி.மு.க வேட்பாளர் பி.வி.பாரதி 76,587 வாக்குகளும் திமுக வேட்பாளர் எஸ்.கிள்ளை ரவீந்திரன் 67,484 வாக்குகளும் பெற்றிருந்தனர். 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் கிள்ளை ரவீந்திரன் வாய்ப்பை இழந்தார். இவர் திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது மீண்டும் கிள்ளை ரவீந்திரன் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். அதிமுக பிளவும், அரசுக்கு எதிரான மக்கள் மனநிலையும், தோற்றாலும் கிள்ளை ரவீந்திரனின் மக்கள் நலப்பணிகளும் அவருடைய வெற்றிவாய்ப்பை பிரகாசமாக மாற்றியிருக்கின்றன.

சீர்காழி தொகுதியை பொருத்த மட்டில் கொரோனா நெருக்கடி காலத்திலும் நிவர் புயல் சேதத்திலும் கிள்ளை ரவீந்திரனின் செயல்பாடுகள் மெச்சும்படியாக இருந்தன. தலைமையின் உத்தரவுகளை கச்சிதமாக அமல்படுத்தும் தொண்டராக ரவீந்திரன் இருக்கிறார். கட்சிக்காரர்கள் மத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றுள்ளார்.

இந்தமுறை பாமக அதிமுக கூட்டணியில் இருந்தாலும், அதிமுகவுக்கு உதவியாக இருக்காது. ஏனென்றால் இந்தத் தொகுதியில் அதிமுக வாக்குகளை அமமுக சரிபாதியாக பிரிக்கிறது. எப்படி இருந்தாலும் திமுக வேட்பாளராக கிள்ளை ரவீந்திரன் மீண்டும் களமிறக்கப்பட்டால், கடந்தமுறை குறைவான வாக்குகள் வித்தியாசத்தில வாய்ப்பை இழந்த அனுதாபமும் இணைந்து குறைந்தபட்சமாக 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

You may also like
நல்லா கெளப்புறாய்ங்கடா பீதிய! – ஒரு சாமியாரின் புது சரடு!
உதயநிதி ஸ்டாலின் ஊர் சுற்ற வேண்டும்!
சீமான் அயோக்கியர் என்று சொல்ல பல காரணங்கள் உள்ளன..!
தம்பிகளின் தல வரலாறு . பாகம் 2.

Leave a Reply