Home > அரசியல் > கொரானா சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத தமிழக முதல்வர் – தினகரன் குற்றசாட்டு

கொரானா சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத தமிழக முதல்வர் – தினகரன் குற்றசாட்டு

முதல்வர் பங்கேற்ற பாலம் திறப்பு நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை மீறி ஏராளமானோர் கலந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் – ஜிஎஸ்டி சாலையுடன் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (செப்டம்பர் 17) திறந்து வைத்தார். முதல்வர் வருகையை முன்னிட்டு அவரை வரவேற்க அப்பகுதியில் ஏராளமான அதிமுகவினர் குவிந்தனர்.

இதையடுத்து, கொரானா காலத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஆளுங்கட்சியினர் கூடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கொரோனா தொற்றின் வீரியம் இன்னும் குறையாத நிலையில், சென்னை பல்லாவரத்தில் மேம்பாலம் திறப்புவிழா என்ற பெயரில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கூத்துகள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

திட்டமிட்டு ஆட்களைக் கூட்டிவந்து சமூக இடைவெளியின்றி அவர்களை நிற்கவைத்து வரவேற்பு என்ற பெயரில் அரசு பிறப்பித்திருக்கும் அத்தனை நோய் தடுப்பு விதிமுறைகளையும் மீறும் வகையில் நடந்துகொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் இவ்வாறுதான் நடந்துகொண்டார்என்று சாடியுள்ளார்.

அரசின் விதிகளை முதலமைச்சரே மதிக்காமல் அரசு விழாவை நடத்தினால் மற்றவர்கள் எப்படி அதனை மதிப்பார்கள்? அதிமுக தொண்டர்களைப் பற்றி முதலமைச்சருக்கு அக்கறையில்லாமல் போனாலும், அப்பாவி மக்களுக்கு நோய் பரவுவதற்கு அவரே காரணமாக இருப்பது குற்றமில்லையா என்று கேள்வி எழுப்பிய தினகரன், “கொரோனா பரவலுக்கு மக்கள்தான் காரணம் என சித்திரிக்கும் முதல்வர், அதற்கு நேர்மாறாக தானே செயல்படுவது எவ்வகையில் சரியாக இருக்கும்” என்று கேட்டுள்ளார்.

மேலும், “சட்டத் திட்டம் எல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டும்தானா? தமக்குப் பொருந்தாது என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? மேம்பால திறப்பு போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் காணொலிக் காட்சி வழியாக நடத்திவிட முடியாதா? படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்பது போல் உள்ளது அவருடைய செயல்பாடு” என்றும் தினகரன் குற்றம்சாட்டினார்.

You may also like
கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் அறிவிப்பு
அதிமுக வின் 49-வது ஆண்டு தொடக்க விழா
அதிமுகவின் 49ஆம் ஆண்டு தொடக்க விழா
கோயம்பேடு சந்தை வியாபாரிகள்
கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா
சென்னை
கொரோனா பாதிப்பு சென்னையில் மீண்டும் அதிகரிக்கிறது.

Leave a Reply